தலையில் பொடுகுத் தொல்லையா?

0
Business trichy

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் பல அபூர்வ குணங்கள் நிறைந்துள்ளதை நாம் அறிந்த போதும் அதனை பயன்படுத்துவதில்லை. கடையில் விக்கும் ஷாம்புதான் பொடுகுத் தொல்லைக்கு அருமருந்து என்று நினைக்கிறோம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் நீ உணவு அருந்தலாம் என்பர். விஷமுறிவிற்கு மிளகு பயன்படுகிறது. மேலும்,

தொற்று நோய்

மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

loan point

போதை பழக்கம்

nammalvar

சிகரெட், பீடி, புகையிலை போன்ற போதை பொருட்கள் உடலுக்கு தீமை விளைவிப்பவையாகும். இப்பழக்கம் கொண்டவர்கள் இவற்றை பயன்படுத்தும் நேரத்தில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் அப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

 மலட்டு தன்மை

இன்று நாம் உண்ணும் உணவுகள் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. இவற்றை உண்பதால் சில ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்துகிறது. மிளகை தினந்தோறும் உண்பதால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும்.

வாயு தொந்தரவுகள்

வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.

புற்று நோய்

web designer

நார்ச்சத்தில்லாத உணவுகளையும், மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இவர்கள் உண்ணும் உணவில் மிளகு அவ்வப்போது சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும்.

சளி மற்றும் இருமல்

மழை மற்றும் குளிர்காலங்களில் பலருக்கும் ஜலதோஷம் தொற்றி சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இக்காலங்களில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெண்ணீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.

 பற்கள்

உணவை மென்று தின்பதற்கு பற்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக இருக்கிறது.

பொடுகு தொந்தரவு

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும், உடலின் தன்மையாலும் சிலருக்கு தலையில் பொடுகு தொந்தரவு ஏற்படுகிறது. தினந்தோறும் சில மிளகுகளை மென்று சாப்பிட்டு வருவதால் பொடுகு தொல்லை நீங்கும்.

தோல் நலம்

வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. வேறு சிலருக்கு தோலில் சில பகுதிகளில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இந்த இரு பிரச்சனைகளையும் போக்குவதற்கு சில மிளகுகளை தினமும் இவர்கள் சாப்பிட வேண்டும்.

ரத்த அழுத்தம்

நாற்பது வயதை நெருங்குபவர்கள் எல்லோருக்கும் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுவது இயற்கையானதே. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள தினமும் சில மிளகுகளை மென்று தின்பது சிறந்தது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.