திருச்சி மாநகராட்சியில் புதிதாக பூங்கா, உடற்பயிற்சி கூடம் மற்றும் நீரூற்று

0
Business trichy

திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் புதிதாக பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் நீரூற்று போன்ற பணிகள் மேற்கொள்ள ரூ.9.65கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் பணி நடைபெறும் இடங்கள் விபரங்கள் குறித்து தெரிவித்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் புதிதாக பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் நீரூற்று போன்ற பணிகள் மேற்கொள்ள ரூ.9.65கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழ்கண்டவாறு நிதிகள் ஒதுக்கி, கீழ்கண்ட இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி ரங்கம் கோட்டத்தில் 1வது வார்டு ராகவேந்திரபுரம் நடேசன் மனைப்பிரிவில் பூங்கா, 3வது வார்டு னிவாசலு நினைவு பூங்காவில் அபிவிருத்தி பணி, வார்டு எண் 5ல் மங்கம்மா நகர் பகுதியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், வார்டு எண் 5ல் மங்கம்மா நகர் விஸ்தரிப்பு காவிரி கரை பகுதியில் பூங்கா, உடற்பயிற்சி கூடம், வார்டு எண் 5ல் மாம்பழச்சாலை பழைய காவிரி பாலம் செல்லும் அணுகு சாலையில் திறந்த வெளி பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், வார்டு எண்6 அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் தெற்கு பகுதியில் பூங்கா , வார்டு எண் 8ல் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டுதல், திறந்த வெளி உடற்பயிற்சி மையம், சிறுவர் விளையாட்டு திடல்.

Half page

வார்டு எண் 4,5,6மற்றும்8 ல் உள்ள அகிலாண்டேஸ்வரி நகர், கர்த்திகேயன் கார்டன், அம்மாமண்டபம் சாலை மற்றும் சஞ்சிவி நகர் பார்க் பகுதியில் செயற்க்கை நீருற்று, வார்டு எண்.9ல் கீழசிந்தாமணி பகுதியில் புதிய கழிப்பிடம், வார்டு எண்9ல் வெனீஸ் நகர் காந்தி தெருவில் 6 இருக்கைகள் கொண்ட புதிய கழிப்பிடம் கட்டுதல், திறந்த வெளி உடற்பயிற்சி மையம், சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்படுகிறது.

அரியமஙகலம் கோட்டம் வார்டு எண் 7ல் ஆண்டாள் நகர் பகுதியில் நீரூற்று, வார்டு எண் 7ல் திருச்சி சென்னை பைபாஸ் சாலை மற்றும் தஞ்சாவூர் சாலை ஜங்ஷன் பகுதியில் நீரூற்று அமைத்தல், வார்டு எண் 15ல் வேதாத்திரி நகர் பகுதியில் நீரூற்று, வார்டு எண் 19ல் பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நீரூற்று அமைத்தல், வார்டு எண் 21ல் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் திறந்த வெளி பூங்கா, வார்டு எண் 62ல் சோழன் நகர் பகுதியில் நீரூற்று, வார்டு எண் 64ல் பகவதிபுரம் பகுதியில் திறந்த வெளி பூங்கா, அரியமங்கலம் கோட்ட பகுதியில் ரூ.26 லட்சத்தில் பூங்காக்களை பராமரிப்பு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேபோல் பொன்மலைக் கோட்டத்தில் வார்டு எண் 37ல் சாய்நகர், வார்டு எண்.38 லிங்கம் பூங்காவில் புல்வெளி, வார்டு எண்.39ல் பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் நடைபாதை மராமத்து பணி, வார்டு எண்46ல் லாசன்ஸ் சாலையில் உள்ள பூங்காவில் நீருற்று, வார்டு எண்.63ல் சக்தி நகர், கணேஸ் நகரில் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், விக்ணேஸ் நகரில் பூங்கா மேம்படுத்தும் பணி.

மேலும் கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக் நகர், ராஜராஜன் நகர் பூங்கா இடத்தில் தற்காப்பு சுவர், பேவர் பிளாக், விளையாட்டு பொருட்கள், மின்விளக்குகள், தண்ணீர்வசதி மற்றும் பூங்கா அமைக்கும் பணி. பொன்னகரில் பூங்கா இடத்தில் பூங்கா அமைக்கும் பணி, தென்னூர் ரயில்வே மேம்பலத்தில் வர்ணம் பூசி அழகாக்கும் பணி,    வ.உ.சி.தெரு அண்ணாநகரில் ஐலாண்டை அழகுபடுத்தும் பணி,    இந்திராகாந்தி சிலை அமைந்துள்ள இடத்தில் பூங்கா அலங்கரிக்கும் பணி,    ஆட்டுமந்தை தெருவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பில் உள்ள பூங்காவில் நீர் நீரூற்று அமைக்கும் பணி,    உறையூர் மேட்டுத்தெருவில் பி.டி.ராஜன் பூங்காவினை மேம்படுத்தும் பணி.

பாத்திமாநகர் பூங்கா இடத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் எனமொத்தம் ரூ.9கோடியே 65லட்சத்து 73ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் துவங்க உள்ளது.

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.