திருச்சியில் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

0
1

தமிழக காவல்துறையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நுண்ணறிவு போலீசார் பணியில் இருப்பர்.

Helios

இவர்கள், காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குற்றவாளிகளை நோட்டமிடுதல், ஆர்ப்பாட்டம் போராட்டம் குறித்து தகவல்களை சேகரித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துதல், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் வரையிலானவர்களை நோட்டமிடுதல், நியாயமாக பணி செய்கிறார்களா என்பது உள்ளிட்டவைகளை கண்டறிந்து அது குறித்த தகவல்களை தினமும் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

2

இதில் திருச்சி மாநகரில் நுண்ணறிவு பிரிவிற்கு உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளனர். மாநகரில் 14 காவல்நிலையங்களிலும் நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளனர்.

இதில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணேசன் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் சென்றதால் அங்கு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மூர்த்தியும், அந்த பணியிடத்திற்கு கன்டோன்மென்ட்டில் இருந்த சங்கரையும் நியமித்து மாநகர கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.