திருச்சி பொதுமக்களுக்கு இடையே போட்டியை அறிவித்த மாநகராட்சி ஆணையர் !

0
Business trichy

திருச்சி மாநகரில் வீட்டிலேயே இயற்கை உரமாக தயாரிக்கும் முறையினை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இனி ஒரு விதி செய்வோம் இல்லந்தோறும் உரம் செய்வோம் எனும் போட்டியின் தேதி ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தினசரி உருவாகும் மக்கும் குப்பைகளை அவர்களது வீட்டிலேயே இயற்கை உரமாக தயாரிக்கும் முறையினை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 24ம் தேதி வரை இனி ஒரு விதி செய்வோம் இல்லந்தோறும் உரம் செய்வோம் எனும் போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் மாநகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் முழுமையாக மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணிகள் செயல்படுத்துவதனை உறுதி செய்யும் விதத்திலும் இப்போட்டி காலத்தினை ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்தும், போட்டியின் இறுதி முடிவுகளை ஒவ்வொரு பள்ளியிலும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஜூலை கடைசி வாரத்தில் பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Image
Rashinee album

பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் மேற்கண்ட காலநீட்டிப்பினை பயன்படுத்தி தங்களது இல்லங்களில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணிகளை மேற்கொண்ட மாணவர்கள் அதற்கான விவரத்தினை எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாநகராட்சி அலுவலர்களால் ஒவ்வொரு வாரமும் மேற்கண்டவாறு பணிகளை நிறைவு செய்த மாணவர்களின் பட்டியலினை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் பெற்று அதனடிப்படையில் தல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 8300113000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மக்கும் குப்பைகளை உரமாக மாற்றியதை புகைப்படம் எடுத்து மாணவர் பெயர், முகவரி, மற்றும் பள்ளி முகவரி ஆகிய விவரங்களை அனுப்பி வைக்கலாம். மேலும் Smart Trichy ஆப் மூலமும் பதிவு செய்யலாம்.இதன்படி பெறப்படும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே கணிணி மூலம் பதிவு செய்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

 பரிசுகள் விபரம்

முதலில் தேர்வு செய்யப்படும் 733 மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000ம் மதிப்புள்ள ஒரு சைக்கிளும், இரண்டாவதாக தேர்வு செய்யப்படும் 733 மாணவர்களுக்கு இரண்டாம் பரிசாக தலா ரூ. 1500 மதிப்புள்ள ஒரு கைகடிகாரமும், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படும் 733 மாணவர்களுக்கு மூன்றாம் பரிசாக தலா ரூ.750 மதிப்புள்ள ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அதிக சதவீதம் வீட்டில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் செயலை ஏற்படுத்திய மாணவர்கள் பங்கேற்கும் சிறந்த 10 பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு தொகை வழங்கப்படும்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.