ரம்ஜான் சிறப்பு தொழுகை

0
Business trichy

மணப்பாறை

ரம்ஜான் பண்டிகையை யொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை பாத்திமலையில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். முதலில் தர்மம் செய்து வாழ்வது குறித்து ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் காதர் ஹூசைன் மன்பஈ சிறப்புரையாற்றினார். அதன்பின்னர் முஹம்மதியா பள்ளிவாசல் இமாம் ரஹ் மத்துல்லா சிறப்பு தொழுகை நடத்தினார். தொழுகை நிறைவு பெற்ற பின்னர் குத்பா ஓதப்பட்டதை தொடர்ந்து ஹஜ்ரத் சிராஜ்த்தீன் தாவூதி சிறப்பு துஆ ஓதினார்.

நிறைவாக மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், இந்தியா வல்லரசு நாடாகவும் துஆ ஓதப்பட்டது. பின்னர் சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் வையம்பட்டி, மகாளிப்பட்டி, கல்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான்சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Kavi furniture
MDMK

டோல்கேட்

திருச்சி நெ.1 டோல்கேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. தாளக்குடிஅருண் நகரில் உள்ள திடலில் சுல்தானியா பள்ளிவாசல் சார்பில் ரம் ஜான் கூட்டு தொழுகை நடைபெற்றது. இதேபோல சுல்தானியா பள்ளிவாசல் மதரஸா பள்ளிவாசலில் முஸ்லிம் பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

நெ.1 டோல்கேட் மேனகா நகரில் உள்ள மஜ்ஜித்தே பிலால் பள்ளிவாசல், கூத்தூர் அல்மஜித் பிர்தோஸ் பள்ளிவாசல், மேலவாளாடி பகுதியில் உள்ள முபாரக் பள்ளிவாசல் மற்றும் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் தாளக்குடி கிளை சார்பில் சிறப்பு தொழுகை நடை பெற்றது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.