திருச்சியில் போதை மறுவாழ்வு மையம் மூடப்பட்டது

0
Business trichy

திருச்சி போதை மறுவாழ்வு மையம் மூடப்பட்டது. அங்கு மர்மமாக இறந்த போலீஸ்காரரின் உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே.நகரில் இயங்கிய போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்டமங்கலத்தை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் (வயது 34) கடந்த 1-ந் தேதி மர்மமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காக மாத்திரைகள் கொடுக்கப்பட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. உடனடியாக உறவினர்கள், அவரது உடலை பெற்றுச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சி கே.கே.நகர் போலீசில், தமிழ்ச்செல்வன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை உடனடியாக தொடங்கினர்.

loan point

இதையடுத்து போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் உடனடியாக வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த ஊழியர்கள், நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சென்னை அரசு மனநல காப்பக இயக்குனர் அலுவலக உத்தரவுக்கு ஏற்ப, டாக்டர் நிரஞ்சனா தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்சி கே.கே.நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

nammalvar
web designer

அப்போது, அந்த மையம் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் மையத்தில் உள்ள பதிவேடுகள், நோயாளிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மருத்துவ குழு ஆய்வு செய்தது. கடந்த 2 ஆண்டுகளாக மையம் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்கள், அரசிடம் அனுமதி பெற்றதற்கான கடிதம் என எதுவும் இல்லை என டாக்டர் நிரஞ்சனா தெரிவித்தார். இதற்கிடையே போதை மறுவாழ்வு மையம் நேற்று மூடப்பட்டது.

கண்டமங்கலத்தில் போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் புதைக்கப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் மாலை காட்டுமன்னார் தாலுகா தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஷியாம் சுந்தர் (காட்டுமன்னார் கோவில்), சகாய அன்பரசு (திருச்சி கே.கே.நகர்) ஆகியோர் முன்னிலையில் போலீஸ்காரர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வரதராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர், போலீஸ்காரர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மர்மமாக இறந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது உடன் இருந்த விசாரணை அதிகாரியான திருச்சி கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு கூறியதாவது:-

சந்தேக மரணம் என புகார் கொடுத்ததன் அடிப்படையில், புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ்காரரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் 3 டாக்டர்கள் பிரேதபரிசோதனை செய்தனர். போலீஸ்காரர் சாவு குறித்த விவரத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அது இன்னமும் சந்தேக மரணமாகவே நீடிக்கிறது. அவரது உடலில் இருந்து தோல், முடி, எலும்பு மற்றும் சதை பகுதி உள்ளிட்ட உடற்கூறுகள் டாக்டர்களால் சேகரிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள வட்டார தடயவியல் அலுவலகத்திற்கு ரசாயன பரிசோதனை மற்றும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னரே, போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் இறப்பில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்கும். போலீஸ் தரப்பில், முறைப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.