திருச்சியில் குடி போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்- மாவட்ட ஆட்சியர் அதிரடி

0
Full Page

திருச்சியில் குடி போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்- மாவட்ட ஆட்சியர் அதிரடி.

திருச்சி கேகேநகரில் இயங்கிவரும் லைட் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர். நிரஞ்சனா தலைமையில் இருவர் நல்வாழ்வு மையத்தில் விதிமீறல் உள்ளதா என்பதை அறிய நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.. ஆனால் இந்த மையமானது முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Half page

இதனைத் தொடர்ந்து இன்று குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் சிவராசு சுகாதார துறை இணை இயக்குனர் சம்சாத் பேகத்திற்கு உத்தரவிட்டதையெடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்போடு போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்சாத் பேகம் கூறுகையில்..கேகே நகரில் உள்ள லைஃப் கேர் குடிபோதை மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் உரிமையாளர் மணிவண்ணன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும். திருச்சி மாவட்டத்தில் தனியார் 5 குடி போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அந்த மையங்களை எல்லாம்  ஆய்வு செய்துள்ளோம் என்றும்  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வயலூர் பகுதியில் உள்ள குடி போதை மையம் இதே போன்று ஒரு புகார் வந்தது அதனை நேரில் சென்று ஆய்வு செய்தபோது உரிய உரிமத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து அவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று கூறினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.