திருச்சியில் 90 ஏக்கரில் ஆக்ஸிஜன் பூங்கா !

0
full

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் 90 ஏக்கரில் ஆக்ஸிஜன் பூங்கா அமைக்க 20 ஆயிரம் பீமா மூங்கில் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் பகுதியில் ஆக்ஸிஜன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பூங்காவில் 5 ஏக்கர் பரப்பில் ஆக்ஸிஜன் பூங்கா அமைக்க தற்போது மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தாவது: தட்பவெட்பநிலை மாற்றத்தால் காற்றில் ஆக்ஸிஜனை விட கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பருவநிலை மாற்றத்திற்கு முன்பு 280 பிபிஎம் அளவு இருந்து கார்பன்டை ஆக்ஸைடு தற்போது 400 பிபிஎம் வரை இருக்கிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் 1,500 பிபிஎம் வரை கார்பன்டை ஆக்ஸைடு இருக்கிறது.

ஆக்ஸிஜனை அதிகம் வெளிப்படுத்தும் பீமா மூங்கில் என்பதை வாங்கித்தான் இந்த ஆக்ஸிஜன் பார்க் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இந்த வகை மூங்கில் வருடத்திற்கு 20 அடி வளரக்கூடியது. 280 கிலோ வரை எடையில் பருமனாகவும் வளரும். இந்த மூங்கில் வருடத்திற்கு 450 கிலோ கார்போஹைட்ரேட் வாயுவை உள்வாங்கி 320 கிலோ ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 280 கிலோ ஆக்ஸிஜன் இருந்தாலே போதும். ஒரு மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவைவிட கூடுதலாக ஒரு மூங்கில் மரம் தருகிறது. இதுதவிர இந்த மரத்தின் ஆயுட்காலம் என்பது மற்ற மூங்கிலைப்போன்று பூ பூத்து 30-40 வருடங்களில் ஆயுள் முடிவது கிடையாது. இது மலட்டுத்தன்மை என்று கூட சொல்லாம். இதனால் பூ பூக்காமல் சுமார் 100 வருடத்திற்கும் மேலாக இருக்கும். 40அடி உயரம் வரை வளரும். இதன் உயரம் அதிகரிக்கும்போது வெட்டிவிட்டால், பின்னர் மீண்டும் வளரும். அதாவது வாழையடி வாழையாக என்று சொல்வார்களே அது போல. வெட்டிய மூங்கிலை சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக விற்பனை செய்ய உள்ளோம்.

poster
ukr

இந்த திட்டத்தை செயல்படுத்த இதற்கு பசுமை பூங்காவில் 5 ஏக்கர் பரப்பில் ஆயிரம் மூங்கில் மரங்களும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பகுதியில் உள்ள 85 ஏக்கரில் 20 ஆயிரம் மூங்கில் மரங்களும் நட்டு ஆக்ஸிஜன் பூங்காவாக மாற்றிட உள்ளோம். இதில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதைகள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கிவிட்டது. இந்த திட்டம் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இருப்பினும் மூங்கில் மரக்கன்று நடப்பட்டு முதல் ஒரு வருடத்திற்கு அவை 20 அடி வளரும் வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. மரமாக வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்கு பிறகு தான் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். முன்னதாக அனுமதித்தால் மரக்கன்றுகள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுவிடும். மேலும் இந்த மூங்கில் மரங்களை பெங்களூருவில் உள்ள நிறுவனத்திடமிருந்து வாங்கி பராமரிக்க உள்ளோம் என தெரிவித்தார். இதனால் காற்று மாசுடும் சூழலில புதிய முயற்சியாக தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் ஆக்ஸிஜன் பூங்கா அமைக்கப்படுவதை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

அசாம் வகை பீமா மூங்கில்.

பீமா மூங்கில் என்பது அசாம் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அவற்றிலிருந்து குளோனிங் முறையில் ஆராய்ச்சியாளர் ஒருவரால் அதிகளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது. இவைகளை பெங்களூருவில் உள்ள காப்புரிமை பெற்ற நிறுவனத்திடமிருந்து தான் மாநகராட்சி நிர்வாகம் கொள்முதல் செய்ய உள்ளது. ஆக்ஸிஜன் என்பது உயிர்களுக்கு தேவைான ஒன்றாக இருக்கும் நிலையில் தூய காற்று இல்லையெனில் மூச்சு திணறல் ஏற்படுவதை நாம் பார்த்து இருக்கிறோம். மாநகராட்சி இந்த புதிய முயற்சியால் மாநகர மக்கள் அதிகளவு ஆக்ஸிஜன் சுவாசிக்க முடியும்.

half 1

Leave A Reply

Your email address will not be published.