விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு : பயணிகள் தவிப்பு

0

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் ஸ்கூட் விமானம்  இரவு  12.30 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வந்துவிட்டு, மீண்டும் திருச்சியில் இருந்து 1.30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்லும். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 113 பயணிகள் அதனுள் அமர்ந்து விட விமானம் புறப்பட தயாரானது.

அப்போது, விமானத்தில் இறக்கை பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையறிந்த 113 பயணிகளும் விமானத்தில் தவித்தனர். பயணிகளை விமானத்திலிருந்து இறக்காமலேயே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியை தொழில் நுட்ப வல்லுனர்கள் தொடங்கினர்.

food

2 மணி நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டது. இதனால் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக 3.30 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானம் வானத்தில் பறக்கும் முன்பே தொழில்நுட்ப கோளாறு விமானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த வாரம் சிங்கப்பூர் புறப்பட்ட இதுபோன்ற ஸ்கூட் விமானத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதை சரிசெய்த பின்னரே விமானம் தாமதமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது என்பது  குறிப்பிடத்தக்கது. ஸ்கூட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவது அதிகாரிகள், பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.