மெரினா புரட்சி ஆவணபடம் ஏன் பார்க்க வேண்டும்?

0
Business trichy

இந்த படத்தை இயக்குனரின் பேரன்பால் திரைக்கு வரும் முன்னே பார்க்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பற்றிய என் கருத்தாக, ஏன் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தை என் சிறு அறிவிற்கு எட்டியவாறு நான் சொல்கிறேன். உண்மையின் சமரசமற்ற இயக்குனருக்கு என் முதல் நன்றி.

இங்கு ஆவணங்கள் பாதுகாக்கபடுவதாக சொல்லப்படும் பல தருணங்களில் ஏதேனும் ஒரு அரசு அலுவலகங்களில் மெழுகுவர்த்தி சரிந்து விழுந்தோ அல்லது தரமற்ற மின் கம்பிகளால் மின்சாரம் கசிந்தோ இல்லை யாருடைய வாயிலிருந்து விழும் பீடிக்கங்கினாலோ அந்த ஆவணங்கள் தீக்கிரையாகி இருக்கும் சூழல் இருக்கும் போது சில உண்மைகளை எந்த வித சமரசமற்று எப்போதாவது தீக்கிரையில் அழியாமல் இருக்க தாள்களில் ஆவணப்படுத்தாமல் நெஞ்சத்தில் தனலாய் தகிக்க வைத்திருக்கிறார் இருக்கிறார் எம்.எஸ். ராஜ் அவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக கொண்டு மெரினாபுரட்சி என்ற திரைப்படத்தின் மூலமாக. இந்த படத்தை இயக்கியதன் காரணமாக உண்மையின் ஒரு சமரசமற்ற இயக்குனாராக வலம் வருகிறார். இதற்கு பின் தமிழ் திரைப்பட உலகம் திரும்பி பார்க்கப்படும் ஒருவராக மாறுவார் என்பதில் துளி அளவிலும் சந்தேகம் இல்லை.

நம் நாட்டில் சில உண்மைகள் எங்கோ அமிழ்ந்தும் பல பொய்கள் ஆங்காங்கே வேர் விட்டு நிற்கும் மரங்களாய் நிற்கின்றன. அந்த நிழல்களே இங்கு உண்மைக் காற்றை வீசுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. பொய்யின் காற்று வேண்டுமானால் தென்றலாய் வீசக்கூடும் உண்மைக் காற்றானது சூராவளியாய் மாறி வீசுமே அல்லாமல் ஒருபோது அது தென்றலாய் வீசுவதில்லை என்ற அடிப்படையினை தாங்கி நிற்கிற ஆவணப்படம் தான் மெரினா புரட்சி.

Kavi furniture

பத்து லட்சம் மக்களால் நடத்தப்பட்ட, இந்த உலகமே திரும்பி பார்க்க வைத்த போராட்டம் நம்மை நெகிழ்ச்சியிலும் மன உறுதியிலும் வென்றெடுத்த போராட்டம் என்று நம்பும் மெரினா போராட்டத்தை நாம் பார்த்த ஒரு பக்கமாக இருந்தாலும், இந்த படம் அதன் பின் நடந்த வெட்ட வெளிச்ச உண்மைகளை நாம் அறிந்திராத பல விசயங்களை அம்பலப்படுத்தி இருக்கிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

இந்த போராட்டம் எப்போது ஆரம்பித்தது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, எங்கு ஆரம்பிக்கப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது, அங்கு ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன?, அந்த போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், ஏன் இந்த போராட்டத்தை வன்முறையில் முடித்தார்கள், அந்த நேரத்தில் அரசு இந்த போரட்டத்தை தவிர்த்து ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அது என்ன பணி, இந்த போராட்டத்தின் பின்னால் இயங்கிய முகங்கள், இந்த போரட்டத்தின் மூலமாய் தனக்கு சாதகமாக காய் நகர்த்திய திரைமுகங்கள் என்று இப்படி எல்லா விதமான பார்வையில் புலனாய்வு செய்து அதற்கான தரவுகளை கண்டறிந்து அந்த உண்மைகளை சுடுகாட்டு தண்ணீர்குடம் பானையினைப் போல பொட்டென்று தோளில் இருந்து கீழே போட்டு உடைத்திருக்கிறார்கள்.

MDMK

இந்த உண்மைகள் வெளிவராமல் இருக்க பல தரப்பட்ட வகையில் சென்சார்போர்ட்டுக்கு அழுத்தம் கொடுத்து அதற்கான சான்றிதழ்களை வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட ஆவண படம் அந்த தடைகளை பல நாடுகளில் முதலில் உடைத்து பின் அந்த வெற்றி மாலைகளை தனதாக்கிக் கொண்டு இங்கு வென்றிருக்கிறது. ஆம்….உண்மைகள் எங்கும் அமிழ்ந்து போவதில்லை. உரக்கக் கத்தி ஊரைக்கூட்டி நியாயம் பேசி வெளிவந்து பல பொய் திரைகளை கிழித்தே தீரும். மெரினா புரட்சியும் அவ்வாறே…!

நாம் ஏன் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும் என்ற பலக்காரணங்கள் இந்த படத்தில் இருக்கின்றன.

முக்கியமாக இந்த காட்சி நகர்தலே சில கேள்விகளுடன் ஆரம்பித்து அந்த கேள்விகளுக்கான பதில்களை அறிய முற்படுவது போலவும் அதன் பின்னால் இருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்துவது போலவும் இருக்கும்.அதிலேயே பல உண்மைகளை அறிய வேண்டிய உற்சாகமும், உள்மன எண்ணமும் தயாராய் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

விரைவில் திரையரங்குகளில் வெளிவந்து உங்களையும் ஆச்சரியபடுத்தும், உண்மைகளை அலசிபார்க்க வைக்கும், சற்றேனும் சிந்திக்க வைக்கும் என்ற நிச்சயப்போக்குடன் அனைவரும் மெரினா புரட்சியினை கொண்டாடுகிற ஒரு ஆவணப்படமாக இருக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் மீண்டும் முறை மிகப்பெரிய திரையில் காண வேண்டும் என்ற உற்சாகத்துடனும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

-பத்மகுமார்

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.