சேவை செய்ய அரசியல் கட்சிகளுக்கு கெட்டவுட்டா…?

0

அரசியல், அரசியல்வாதிகள் என்றாலே ஒருவித தூர பார்வையிலேயே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அணுகுகிறார்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பத்தில் நாம் உணர்ந்துள்ளோம்.

ஆனால் இந்த அரசியல் கட்சியிலிருலிருந்து தான் கவுன்சிலர் தொடங்கி பாராளுமன்றம் வரை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகிறார்கள் மக்கள்.

இது இவ்வாறு இருக்க இன்று (27.05.2019) ந் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில்  நடைபெறும் “மக்கள் குறைதீர்க்கும் நாளில்” கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு மனு எழுதி தருதல் உள்ளிட்ட பணிகளை திருச்சி மாவட்ட  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டி அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்.

இந்த மனுவினை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்கு அனுமதி தர இயலாது என மறுத்துவிட்டார். மேலும் உங்களுக்கு அனுமதி கொடுத்தால் மற்ற கட்சிகாரர்களும் கேட்பார்கள் என பதிலளித்தார்…! நாம் நமது தரப்பு நியாயத்தை விரிவாக விவரித்த பிறகு, அவரே நீங்கள் வேண்டுமானால் உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று வாருங்கள் என பதிலளித்தார்.

ஏன் அரசியல் கட்சிகள் என்றால் மக்களுக்கு சேவை செய்ய கூடாதா…?

food

மற்ற அரசியல் கட்சிகள் இது போன்ற மக்கள் சேவையை முன்னெடுக்கும் என்றால் இதனை அதிகாரிகள் வரவேற்கலாமே….!

இது போன்ற சாதாரண விஷயத்திற்கு நீதிமன்றம் சென்று தான் தீர்வு தேடவேண்டுமா…?

அரசியல் கட்சிகள் அரசியல் மட்டும் தான் செய்ய வேண்டுமா. மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாங்கள் மக்கள் சேவை செய்ய ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த நிலை எங்கு சென்றாலும் தொடர்கிறது. இதனை மாற்றி காட்டும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி.

-S.R.கிஷோர்குமார், வழக்கறிஞர்,

gif 4

Leave A Reply

Your email address will not be published.