35 வயதில் 36 விருதுகள் வாங்கிய இசைபேராசிரியர் திருச்சி தேவா

0
Business trichy

நம்முடைய கலாச்சார, பண்பாட்டோடு பிணைந்துள்ள இசை தாலாட்டு முதல் ஒப்பாரி மனிதனின் வாழ்வியல் பயணத்தில் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அந்த வகையில், இசையின் புனித நீரை சமானியரும் பருகும் வண்ணம் செயலாற்றி வருகிறார் எஸ்.எம் தேவபாலன்.

தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரியில் இருந்து மையப்பகுதியான திருச்சிக்கு வந்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே அர்பணித்து கொண்டு வாழ்கிறார் இசை பேராசிரியர் எஸ்.எம் தேவபாலன். இவரின் முதல் குருவும், இசைக்கு அறிமுகப்படுத்தியவருமான இவரின்  தந்தை எஸ். மாசிலாமணி. இவர் இசை கலைஞர் மட்டுமல்லாமல், பாடகர், நாடக நடிகர், பன்முக கலைஞராக விளங்கி  பல விருதுகள் பெற்றுள்ளார். நான் எவ்வளவு பெரிய  இசை பேராசிரியர் ஆனாலும்  என்னுடைய தந்தையை குரு என்பதில் எஸ்.எம் தேவபாலன் பெருமிதம் அடைகிறார். மேலும், அவருக்கு இசையை ஊட்டி வளர்த்த குருக்கள் கலைகாவரி நுண்கலை கல்லூரியின் தற்போதைய முதல்வர் நடராஜன், பேராசிரியர்கள் வெங்கடலெட்சுமி, மற்றும் சந்திரசேகர் எனகூறுவதில் பெருமிதம் அடைகிறார்.

இசைத்துறையில் சாதிக்க துடிக்கும் இவர், திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பும், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டமும்,  ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்று தற்போது இசையில் முனைவர் பட்டம் பயின்றுவருகின்றார்.

loan point

முதல் முதலாக 2003 ஆண்டு தஞ்சை பல்கலைக் கழகமும் தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து இந்திய அளவில் நடைபெற்ற மரபு ராகம் என்ற இசை போட்டியில் கலந்து கொண்டு முதல்பரிசு பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு  டாக்டர். விஜயலெட்சு நவனீத கிருஷ்ணன் நடுவராக இருந்து பரிசினை வழங்கினார். 2004 ஆம் ஆண்டு  திருவையாறு தமிழையா கல்வி கழகம் சார்பில் இசை போட்டியில் வெற்றி பெற்று இசைமாமணி விருது பெற்றுள்ளார். அதேபோல், 2005 ஆம் வருடம் இசைமணி விருதும் பெற்றார். திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள மக்கள் சத்தி இயக்கம், மாணவர் பேரமைப்பு சார்பில் வளரும் சாதனையாளர் விருது வழங்கினார்கள். விவேகானந்தர் விருது, சாதனை சுடஓளி, சாதனை சரித்திரம், என பல  விருதுகள் பெற்றுள்ளார்.  

nammalvar
web designer

இறுதியாக 2015ம் ஆண்டு தமிழன் தொலைக்காட்சி சார்பில் சாதனை தமிழன் என்னும் விருதினை வழங்கினார்கள்.  35 வயதான எஸ்.எம் தேவபாலன் தற்போது வரையில் 36 விருதுகள் பெற்றுள்ளார். ஆனாலும், மாணவர்களுக்கு அடிப்படை தமிழ் இசை, கர்நாடக இசை மற்றும் திரையிசை போன்றவற்றை கற்றுகொடுப்பதே தன்னுடைய மிகப்பெரிய விருதாக கருதுகிறார்.

விஜய் தொலைக்காட்சி நடத்திய விஜய் சுப்பர் சிங்கர்ஸ் ஜுனியர் டைட்டில் வின்னர்  ஆஜித்தின் முதல் குரு இவர்தான். இது போல் பல மாணவர்களை உருவாக்கி வருகின்றார். தற்போது மதுரையில் டிபிஎம்(TPM) நுண்கலைக்கல்லூரியை நடத்தி வருகின்றார். மேலும் இவர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தனது கல்லூரியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இசை கச்சேரிகளை  நிகழ்த்தி வருகிறார்.

இவரின் TPM நுண்கலைகல்லூரியில் இசைப்பயிற்சி மட்டுமல்லாமல் பரதம், நாடகம், தட்டச்சு, கிதார் , தபேலா, வயலின், ஓவியம் மற்றும் பல கலைகளுக்கும் பயிற்சி அளித்துவருகிறார். இவர் இசைத்துறை மட்டுமின்றி, நாடகத்துறைலும் தனிமுத்திரை பதித்துவருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற செவனப் ஸ்டாட்டர்ஸ் என்னும் நிகழ்ச்சியில் பலவித தோற்றத்தில் தனது நடிப்புதிறமை வெளிக்காட்டியுள்ளார். இவரின் இந்த நடிப்புத்திறமைக்கு காரணமாக இருந்தவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை பேராசிரியர் இராமசுவாமி ஆவார்.

மேலும், அவர் கூறுகையில் ஆசிரியர் என்பவர் ஒரு ஏணிபோல இருந்து இன்னும் மாணவர்களை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல காரணமாக இருக்கவேண்டும் என்றார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.