திருச்சி மத்திய சிறையில் சமையலர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

0
Business trichy

திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் 2 வருடம் அனுபவம் பெற்று 1.7.2018 அன்று 18 வயதுக்கு மேற்பட்டு 35 வயதுக்குட்பட்டவர் இனச்சுழற்சி பிரிவில் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது.

MDMK

சமையலர் பதவி ஊதிய விகிதம் ரூ.15,900-50,400ல் குறைந்தபட்ச தொகை ரூபாய் 15,900 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும். இப்பதவிக்கு உரிய தகுதி பெற்றவர்கள் சுயவிபரங்களை வரும் 10ம் தேதிக்குள் திருச்சி மத்தியசிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) சங்கர் தெரிவித்துள்ளார்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.