திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் இலவச பயிற்சி

0
Business trichy

திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாட்கள் இலவச கறவை மாடு பயிற்சி நடைபெற உள்ளதாக

பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

MDMK

திருச்சி கொட்டப்பட்டு கோழிபண்ணை சாலையில் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

Kavi furniture

இதில் தரமான கறவை மாடுகளைத்தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்தடுப்பு முறகைள், மடிநோய் தடுப்பு முறைகள், தீவன புற்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு பற்றிய முறைகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்படி இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 6ம் தேதி காலை 10மணிக்குள் நேரில் வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.