திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு: காதல் பிரச்சினை காரணமா?

0
full

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வரும் காமராஜ் மகன் சதீஷ் (வயது 23). டிப்ளமோ படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

இவர், வேறு இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், பெண்ணை அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்துவிட்டு திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நேற்று அதிகாலை காமராஜ் வீட்டின் மேல் சில மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டில் இருந்த சில பொருட்கள் தீயில் கருகின.
இது குறித்து நவல்பட்டு போலீசில் சதீஷ் புகார் கொடுத்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதல் பிரச்சினையா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

half 1

Leave A Reply

Your email address will not be published.