உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கீடு

0

உள்ளாட்சிகளில் 50 சதவீதஇட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவி காலம் 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்துள்ளது.

 

food

அடுத்த மாதம் 2வது வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 33 வார்டுகளில் பெண்கள் தான் போட்டியிட முடியும்.

 

மீதம்உள்ள 32 வார்டுகளில் தான் ஆண்கள் போட்டியிட முடியும். பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் விவரம்: பெண்கள் (பொது) வார்டுகள் 1 , 3, 4, 7, 9, 11, 13, 18, 21, 22, 24, 26, 30, 31, 32, 33, 37, 44, 45, 49, 50, 51, 52, 53, 56, 58, 59, 63, 64. பெண்கள்(எஸ்சி) 6, 8, 15, 62 எஸ்சி(பொது) 17, 42, 65. மேற்கண்ட 36 வார்டுகளும் ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெறுகிறது. மற்ற 29 தொகுதிகளில் பொதுவானவர்கள் போட்டியிடலாம்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.