அறிவோம் தொல்லியல்-17 பயணங்கள் முடிவதில்லை…

0
1

எழுத்துக்களின் தோற்றம் (script):

உலக தொன்மை நாகரீகங்களாய் கருதப்படுவது, எகிப்திய, மெசபடோமிய, சீன, சிந்துசமவெளி நாகரீகங்களே. இதில் சிந்துசமவெளி நாகரீக எழுத்துக்களை தவிர மற்றவை படித்து பொருளுணரப்பட்டது.

சிந்துசமவெளி குறியீடுகள்
4

சிந்துசமவெளி நாகரீக எழுத்துக்கள் குறித்து பல்வேறு கருதுகோள்கள் இருந்தாலும், இன்றுவரை தீர்மானமாய் என்னதான் அம்மக்கள் சொல்லவருகின்றனர் என்பதனை அறிய முடியவில்லை.

சிந்துவெளியில் கிடைத்த பல குறியீடுகள்  நம் தமிழகத்தின் பல பெருங்கற்கால சின்னங்களின் பானையோட்டு கீறல்களில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முந்தைய தொடர்களில் விரிவாய் கண்டோம்.

குமிட்டிபதி போர்க்காட்சி( கருத்தோவியம்)

பொதுவாக எழுத்து தோன்றியதின் வளர்ச்சிநிலைகளை நான்கு வகைகளாய் அறிஞர்கள் கருதுகின்றனர்.

1.உருவஎழுத்து(Pictograph)

2.கருத்தெழுத்து(Ideograph)

3.சொற்குறியீட்டு எழுத்து(Logograph)

4.ஒலிஎழுத்து(Phonograph)

 

1.உருவஎழுத்து:

உலகின் பல இனக்குழுக்களிடையே இவ்வகை எழுத்துகளே முதன்மையானது. அந்தந்த பகுதிகளின் மானிட, தற்சார்பிற்கு ஏற்றவாறு இவை மாறுபடும். இவற்றை அடையாளம் காண முதலில், இவ்வெழுத்து எவ்விடத்தில் கிடைக்கப்பெறுகிறதோ,   அந்நிலமக்களின் தொன்மவாழ்வியலை புரிந்தால் மட்டுமே தெளிவாக உணரமுடியும். சிந்துசமவெளியில் இத்தகைய உருவங்கள் நிறைய கிடைக்கிறது! நம் தமிழக பாறை ஓவியங்களிலும் நிறைய வரைவுகள் கிடைத்தது!  எடுத்துக்காட்டாய் மதகடிப்புதூரில் கிடைத்த  குழுநடனம், குடுமியான்மலையில் கிடைத்த படகில் செல்லும் நபர்கள், குமிட்டிபதியில் கிடைத்த போர்க்காட்சி போன்றவற்றை உதாரணமாய் கொள்ளலாம்.

அழகன்குளம்(சொற்குறியீடு)
2

கருத்தெழுத்து:

எழுதப்பட்ட அல்லது வரையப்பட்ட உருவங்கள், குறியீடுகள் ஒரு சொல்லை உணர்த்தினால் அதுவே கருத்தெழுத்து. உதாரணமாய் இன்றைய போக்குவரத்து குறியீடுகளை குறிக்கலாம். இவ்வகை எழுத்துகள் சிந்துவெளியிலும், எகிப்தில் அதிக அளவிலும் கிடைக்கிறது!

ஒலியெழுத்துகள்:

மேற்கண்ட இரு எழுத்துகளின் மேம்பட்ட அடுத்தநிலைதான் ஒலியெழுத்துகள்.

கீழ்வாலை(உருவஎழுத்து)

உதாரணமாய் மாடு நடக்கிறது என்பதை உணர்த்த, உருவெழுத்து முறையில் மாட்டின் உருவத்தினை வரைந்து காட்டினர். அதற்கடுத்த முறையான கருத்தெழுத்து முறையில் மாட்டின் தோற்றத்தினை வரைந்து அது நடப்பது போன்று கால்களை அசைந்து கொடுத்து வரைந்து உணர்த்தினர். ஒலியெழுத்து முறையில் இதை எவ்வாறு குறிப்பிட்டிருப்பர்?  மாட்டின் உருவத்தினை வரைவதை விடுத்து, அச்சொல்லுக்குரிய பொருளின் வடிவத்தை எழுத்தாய் எழுதினர். உதாரணமாய் கிரேக்கர்கள் காளையை ஆல்பா என்றழைப்பர் அச்சொல்லின் முதல்ஒலியான அ அல்லது a குறிக்க காளையின் தலையை வரைந்துள்ளனர்.

கொடுமணல் (குறியீடுகள்)

குறியீடுகள்:

 

இதுவரை 400 குறியீடுகள் சிந்துசமவெளியில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை குறியீடுகளே பிராமி எனப்படும் தமிழி எழுத்துகளின் முன்னோடி!

பொதுவாக, குறியீடுகளிலிருந்தே தமிழி எழுத்துகள் தோன்றியதென அறிஞர்கள் ஒரு கருதுகோள் கொண்டிருந்தனர். இதன்காரணமாகவே சிந்துசமவெளி, தமிழர் நாகரீகம் என கருத்தியல் இருந்தது. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் வல்லம் அகழாய்வில் கிடைத்த பானையில் மேலடுக்கில் தமிழி எழுத்தும், கீழடுக்கில் குறியீடுகளும் கிடைத்தன. அதன்கீழ் வேறு எதுவும் கிடைக்கவில்லை.

மாங்குளம், தேரிருவேலி, அழகன்குளம், கொடுமணல்  அகழாய்வில் எண்ணற்ற குறியீடுகள் கிடைத்தது!

 

இக்குறியீடுகள் வாயிலாகவே அடுத்தகட்டத்திற்கு மொழியறிவு வளர்ந்தது. நம் தமிழும் இவ்வாறே வளர்ந்தது. ஆகவே இத்தகைய குறியீடுகள், ஓவியங்கள், ஏதோ சாதாண கீறல்களோ, கிறுக்கல்களோ அல்ல. இவையே நம் தொன்ம அடையாளங்கள் இவற்றை பேணிகாப்பது நம் கடமை.

 

அடுத்த இதழில்  தமிழகத்திலுள்ள தமிழிகல்வெட்டுகளை  விரிவாக காண்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்