ஆதிமகள் 18

0
1 full

தன்னை யாரோ பார்ப்பதுபோல் உணர்ந்த கரண். தன் பார்வையால் சுற்றிலும் பார்த்தான். காரின் அருகே நின்று கொண்டிருந்த காயத்ரிதான் தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகத்துடன் அவளையும் கவனித்தான். கரண் தன்னை பார்ப்பதை உணர்ந்த காயத்ரி தனது பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

விசாலியுடனும் சண்முகநாதனுடனும் பேசிக்கொண்டிருந்த கரண், காயத்ரி அருகே வந்து, ஏன், தனியாக அமர்ந்திருக்கிறாய். “நீங்களும் அவர்களுடன் சேர்ந்து உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளலாமே” என்றான். எங்கே நான் தனியாக இருக்கிறேன். நீதான் என்னுள் புகுந்து என்னை இரண்டாய் பிளந்து என்னுள் சரிபாதியை பறித்துக்கொண்டாயே, என அவனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது காயத்ரிக்கு. என்ன நான் கேட்ட கேள்விக்கு மவுனமும், இந்த புன்னகையுமா பதில் என்றான் கரண். கைகளை இறுக கட்டியபடி தன்னை திடகாத்திரமாய உணர்ந்தவளாய், கரணின் கண்களை நேருக்கு நேராய் பார்த்தபடி மெல்ல பேச ஆரம்பித்தாள் காயத்ரி. உங்களது திட்டம், நீங்கள் எடுக்கும் முடிவுகள் இவையெல்லாம் சரியா? தப்பா என்று உங்கள் அனுபவத்தைக்கொண்டு நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

நீங்க, மேடம், அப்பா மூவரும் பேசினதை நான் கவனிச்சவரை நிஜமாக என்னால் இதைப்பற்றி யூகிக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை இது ஒரு புது அனுபவம்  என்று பேசி முடித்தவள். விசாலி பக்கமாய் திரும்பினாள். இந்த இருவரும் பேசிக்கொண்டிருப்பதை விசாலி சுட்டிக்காட்டி சண்முகநாதனிடம் தங்களைப் பற்றி ஏதோ பேசுவதுபோல் காயத்ரி உணர்ந்தாள். கரணிடம் காயத்ரி இங்கிருந்து புறப்பட இன்னும் எவ்வளவு நேரமாகும் என்றாள். ஏன் காயத்ரி உனக்கு ஏதேனும் முக்கிய வேலை இருக்கா என்றான் கரண். அவன் காயத்ரி என்று தனது பெயரை முதன்முதலாக உச்சரித்ததையும், தன் பெயரை சொல்லி தன்னிடம் பேசுவதுமான இந்த அனுபவம்  புதிதாய் தான் துளிர்த்ததைப் போல் காயத்ரி உணர்ந்தாள்.  அவன் கேட்ட கேள்வியை தனக்குள் நினைவு படுத்தியவளாய், “முக்கிய வேலை ஏதும் இல்லை. அதே சமயம் நான் இங்கு இருப்பது முக்கியமா என்ற கேள்வி எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கு” என்றாள்.

2 full

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கரண் அமைதியானான்.

விசாலியும் சண்முகநாதனும் பேசியபடி இவர்கள் அருகாமையில் வந்து சேர்ந்தனர்.

சண்முகநாதனிடம் கரண் நாளைக்கே வேலையை ஆரம்பித்து விடலாம் என கூறிவிட்டு, நால்வருமாக காரில் ஏறி புறப்பட்டனர்.

காயத்ரியோ, தான் கரணிடம் பேசுவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பத்தை சொதப்பி விட்டோமோ என மனதுக்குள் ஆதங்கப்பட்டாள்.

கரணைப் பார்த்த நேரம் முதல் தான் அவன் சிந்தனையாகவே இருந்தும், அவனை நேரில் பார்க்கும் போதெல்லாம் கரண் தன்னைப்பற்றி சொன்னது போலவே தான் குழந்தைத்தனமாகவே பேசுகின்றோமோ என்று காயத்ரிக்கு தோன்றியது.

இதற்கு நேர்மாறான சிந்தனையில் கரண் உழன்று கொண்டிருந்தான். தன் உயிரிலும், எண்ணங்களிலும் மேலோங்கி நிற்கும் இவளிடமிருந்து நான் விலகியிருக்க, தள்ளியிருக்க, சகஜமாக இருக்கும் மனநிலையில் இவளை நான் அணுகினாலும், அது வெறும் பாவனையாகவே முடிந்து போகிறதே. கடும் பாறைக்குள் இறங்கும் கூர் ஆயுதமாய் மேலும் மேலும் எனக்குள் இவள் இறங்கி இறுகி என் அடி ஆழ்மனதை கீறுகிறாள். ஆனால் அவள் எண்ணங்களிலும், அவள் மனதிலும் நான் இல்லாமலிருக்கும் போது, நான் மட்டும் ஏன் என்னை நானே சித்ரவதை செய்து கொள்ள வேண்டும், என அவளின் உண்மை எண்ணம் புரியாமல், இவனாகவே தனக்குள் பலவாறாக குழப்பிக்கொண்டான்.

சொல்லப்போனால் இருவருமே தங்களது எண்ணங்களை பகிராமல் அவரவர் மனப்போக்கில் மனதுக்குள் ஒருவரைப்பற்றி ஒருவர் உயர்வாகவும் உன்னதமாகவும் போற்றிக்கொண்டாலும் கிடைத்த சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும், அவர்களை அவர்கள் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, கடந்து வந்த நாட்களும், சந்தித்த நாட்களும், சந்தித்த நேரங்களும், இந்த குறுகிய இடைவெளியில், நேரத்திற்குள் தன்னுள் எழும் எந்த எண்ணங்களையும், புரிந்து கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்ற யதார்த்த நிலை புரியாமல் இருவரும் தன்னிலையில் தடுமாறினார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.