திருச்சியில் 75 பள்ளிகளை மூட சொல்லி பட்டியல் வெளியிட்ட கலெக்டர்!

0
1 full

திருச்சியில் 75 பள்ளிகளை மூட சொல்லி பட்டியல் வெளியிட்ட கலெக்டர்

 

திருச்சி மாவட்டத்தில் இளம் மழலையர் பள்ளிகள்(பிளே ஸ்கூல்), மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் (நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்) ஆகியவற்றில் அரசு அனுமதி பெற்று நடத்தப்படும் பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற இளம் மழலையர் பள்ளிகளை கண்டறிந்து அப்பள்ளியில் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

2 full

அனுமதி பெற்ற பள்ளிகளின் விவரம் tiru-c-h-i-r-a-p-p-a-l-li.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுமதி பெறாத பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

அரசு விதிமுறைகளின்படி மட்டுமே பள்ளிகள் நடைபெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அனுமதி பெறாத 9 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், 66 இளம் மழலையர் பள்ளிகள் என மொத்தம் 75 பள்ளிகள் கண்டறியப்பட்டு அதனை கல்வித்துறை அலுவலர்களால் மூடுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

மூடுவதற்கு ஆணையிடப்பட்டுள்ள 9 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் விவரம் வருமாறு:-

 

திருச்சி கல்வி மாவட்டத்தில் இஸ்லாமிக் இன்டர்நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, பிளாசம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, என்.ஆர். மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஷார்ப் ஜீனியஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீ எஸ்.ஜி.பப்ளிக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, விஸ்டம் வெல்த் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

 

லால்குடி கல்வி மாவட்டத்தில் பெருவளப்பூரில் உள்ள அன்னை தெரசா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வடுகர்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. முசிறி கல்வி மாவட்டத்தில் புத்தனாம்பட்டி ராஜமுருகன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

 

மூடுவதற்கு உத்தரவிடப்பட்ட 66 இளம் மழலையர்(பிளே ஸ்கூல்) பள்ளிகள் விவரம் வருமாறு:-

 

திருச்சி கல்வி மாவட்டத்தில் ஐ ஜீனியஸ், அன்னை, ஸ்டார் டாட்லர்ஸ், அக்்சரா, அல்கிங்ஸ், ஈரோ கிட்ஸ், பட்டர் பிளைஸ், வசந்தா, அப்டெக் மாண்டனா, கம்போர்டு அண்ணாமலை, ஆப்பிள் கிட்ஸ், பிஸி பேபிஸ், கிட்ஸ்ஸீ, டென்டர் பீட், டெரிசியன் கார்மெல், கிட்ஸ் கேம்பஸ், டைனி விங்ஸ், கிரீன் பார்க் லிட்டில் கிங்டம் மாண்டிசோரி, போகோ, ரைட் பாத், வசந்தா, நியூட்டன் கிட்ஸ், இந்திரா, சாந்தி, விஷ் கிட்ஸ், சாய் பாபா, ஹனி, போதர் ஜம்போ, வேத வர்ஷினி, டெடி கிட்ஸ், சைனிங் ஸ்டார்.

புளூமிங் கிட்ஸ், ஜீனியஸ் கிட்ஸ், டைனி டாட்ஸ், கிட்ஸ் பவுண்டேஷன், விஸ்டம், புளூ பெல்ஸ், எடிபை கிட்ஸ், சரஸ்லையா, லிட்டில் ஏஞ்சல், ஐ.கியூ ஜீனியஸ் கிட்ஸ் இன்டர்நேஷனல், ஐடியல் கிட்ஸ், தர்ஷன், டைம் கிட்ஸ், பெல் உமன்ஸ் வெல்பர் அசோசியேசன்ஸ், பால விகார், கலாலயா பைன் ஆட்ஸ், டைம் கிட்ஸ், பிரிலியண்ட்ஸ், பேர்ல் சிட்டி மாண்டிசோரி, ராஜம் கிருஷ்ணமூர்த்தி கிட்ஸ் பள்ளி, பெஸ்ட் கிட்ஸ், பிஸி இளம் மழலையர் பள்ளி, நரேந்திரா வித்யாலயா, ரெயின்போ, சிறகுகள் இளம் மழலையர்பள்ளி, ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி ஆகிய பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் லால்குடி மற்றும் மணப்பாறை கல்வி மாவட்டத்தில் பரமசிவபுரம் 2 ஈரோ கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, மலையப்ப நகர் லிட்டில் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கே.கே.நகர் 7 டயம் கிட்ஸ் நவ், லிட்டில் ஏஞ்சல் டே கேயர், ரெயின்போ, ஸ்மால் ஒன்டர்ஸ், கிட் ஸி, வாசன் நகர் டி.ஈ.இளம் மழலையர் பள்ளி, அல்லித்துறை ஸ்பிரிங் ஸ்டோன் இளம் மழலையர் பள்ளி ஆகிய பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.