திருச்சி-திருவாரூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கம்

0
1

திருச்சி: திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில், நாளை முதல் ஆக., 30 வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. அதே போல், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருச்சி-திருவாரூர் வழித்தடத்திலும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்களுக்கு, சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் அதிகாலை, 4:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நீடாமங்கலம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், பொன்மலை வழியாக, 6:50 மணிக்கு திருச்சி வந்தடையும். மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து இரவு, 7:45 மணிக்கு புறப்படும் ரயில், 10:45 மணிக்கு திருவாரூர் சென்றடையும் என்று, திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.