திருச்சியில் மாணவ தொழில் அதிபர் !

0
1

திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலை பேருந்து நிறுத்தம் நிழற்குடை அருகே (மாருதி கார் ஷோரூம் எதிரில்) இயற்கை பானம் மற்றும் மருந்துவ குணம் நிறைந்த கரும்புச்சாறை அதன் இயந்திரத்தில் ஒற்றை ஆளாக மிகச் சுறுசுறுப்புடன் பிழிந்து அதனை விற்பனை செய்து கொண்டு இருந்தார் ஒரு  இளைஞர்..

அவரை பார்க்கும் போது சற்று வித்தியாசமாகபட்டது, அவரிடம் கரும்புச்சாரை “ஆர்டர்” கொடுத்தவுடன் மிகச் சுறு சுறுப்பாக கரும்பில் உள்ள மேல் தோலை நீக்கி இயந்திரத்தில் ஒரு முறை நுழைத்து எடுத்தார் பின்பு அதை இரண்டாக மடித்து அதன் இடையில் எலும்பிச்சை பழம், இஞ்சி , புதினா தலைகளை வைத்து மேலும் மூன்று முறை இயந்திரத்தில் நுழைத்து சாறு பிழிந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொடுத்தார் .பருகியவுடன் அவ்வளவு ருசியாக இருந்தது.

கல்லூரி மாணவர் ரவி.
2

அவரின் சுறுப்சுறுப்பு ஈர்த்ததால் அவரிடம் பேச்சு கொடுத்த போது இன்ப அதிச்சி காத்து இருந்தது இன்றைய இளைய தலைமுறையினர்க்கு,அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் எம்.ஏ. படிக்கும் இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவர் ரவி , அவரின் ஊர் ஜெயம்கொண்டம் கல்விக் செலவுக்காக பெற்றோரை பாரம் ஆக்கமல் தெரிந்தவர்களிடம் குறைந்த வட்டியில் பணம் வாங்கி கரும்புச் சாறு இயந்திரத்தை கோவை சென்று வாங்கி வந்து இங்கு கடை போட்டு உள்ளார்.

தினசரி வரும் கனிசமான  வருமானத்தில் உணவுக்கும், கல்விக்கும் , தங்கும் இடத்திற்கும் செலவு போக மீதியாகும் தொகையில் கடனையும் சிறிது அடைத்து பெற்றோருக்கும் சிறிய தொகை கொடுப்பதாக பெருமையுடன் கூறினார். தற்போது விடுமுறை காலம் என்பாதால் முழு நேரம் கடை போட்டு உள்ளதாகவும் கல்லூரி திறந்த பிறகு …மாலை நேர கல்லூரி செல்லும் நண்பர் காலையிலும், நான் காலை நேர கல்லூரி செல்வதால் மதியத்திற்க்கு மேல் நான் கடையை பார்த்துக் கொள்வேன் என்று இன் முகத்துடன் கூறினார். இன்றைய மாணவர்கள் பலர் நடிகர் கட்டவுட்களுக்கு பால் ஊற்றி , ஜாதி அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளில் சேர்ந்து வீணாகி கொண்டியிருப்பவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் மாணவ தொழில் அதிபர் ரவியை மனதார பாரட்டுவோம்.

– ஸ்ரீரங்கம் இளங்கவி

3

Leave A Reply

Your email address will not be published.