தொழில் முனைவோர்திட்டம் – இலவச குறுகிய கால பயிற்சிகள்

0

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் குறுகியகால இலவச பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. துவாக்குடி மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் நிறுவன முதல்வர் ஸ்ரீதர் பென்னுகோடா தெரிவித்துள்ளார் .

இந்திய அரசு சுற்றுலா அமைச்சகமும், தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறையும், இணைந்து திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் விபரம்:-

food

தொழில் முனைவோர்திட்டம் – இலவசகுறுகியகாலபயிற்சிகள்

பயிற்சியின் பெயர்                : : (1) Cook(Tandoor) (2) Barman (3) Baker

(4) Homestay (Multi- Skilled Caretaker)

(5) Halwai – Indian Sweets;

 

பயிற்சிகாலம் : 1 மாதம்
கல்விதகுதி : 8-ம் வகுப்புதேர்ச்சி

 

வயதுவரம்பு

 

 

: 18 வயதிற்குமேல்
பயிற்சி இடம்  : மாநிலஉணவகமேலாண்மைமற்றும் உணவாக்கதொழில் நுட்பவியல் நிறுவனம், துவாக்குடி,  திருச்சிராப்பள்ளி-620 015..
பயிற்சிவகுப்புகள் துவங்கும் மாதம் : ஜீன்
 

 

: மாணவர் சேர்க்கையின் போதுகொண்டுவரவேண்டியவை:

(1)மாற்றுச் சான்றிதழ்; (TC),(2)மதிப்பெண் பட்டியல் (Marksheet),  ((3)ஆதார்அட்டை,(4)மாணவர் பேங்க் பாஸ்புக் (5)பாஸ்போட் அளவுபுகைப்படம் -2,அசல் மற்றும் நகல்  அவசியம் கொண்டுவரவேண்டும்.  

பயிற்சிகள் இலவசமாகஅளிக்கப்பட்டு,அப்பயிற்சியின் போது மாணவ/மாணவிகளுக்கு

(1) பயிற்சிஊக்கத் தொகையாகரூ. 1000/- மற்றும்  (2) இலவசமாக மதியஉணவு,சீருடை,பயிற்சி உபகரணம் மற்றும் பயிற்சிகையேடு வழங்கப்படும். (3) பயிற்சியினை நிறைவு செய்வோருக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

வெளிமாவட்ட மற்றும் 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வரும் மாணவ / மாணவிகளுக்கு தங்கும் வசதி இலவசமாகவழங்கப்படும். பயிற்சி முடித்த உடன் வேலைஉடனடியாக ஏற்படுத்தி தரப்படும்.  மாதந்தோறும் புதிய வகுப்புகள் துவங்கப்படும்

குறிப்பு:

விண்ணப்பபடிவத்தொகை–

(1) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்கு ரூ.100/- (ஆண்கள்)

(2) பெண்கள் மற்றும்மாற்றுத் திறனாளிகளுக்குரூ.50/-

(3)  ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினற்கு விண்ணப்பபடிவம் இலவசம்.

(ஆண்/பெண்)

தற்போது சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்:

(அலுவகதொலைபேசி எண்)

 0431-  2500660/ 88838 90586  / 95857 33589

கல்லூரிமுதல்வர்

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.