செல்போனில் பேசினால் தண்ணீர் வரும் – தோற்று போன சாருபாலா அதிரடி!

0
Business trichy

செல்போனில் பேசினால் தண்ணீர் வரும் – தோற்றுபோன சாருபாலா அதிரடி!

தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க உதவுவேன் என்று சாருபாலா தொண்டைமான் கூறி உள்ளார்.

Kavi furniture
MDMK

என்றும் மக்கள் பணியை செய்து வரும் எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தினகரனின் சுற்றுப்பயணத்தையும், பிரசாரத்தையும் கண்டு அஞ்சிய மத்திய அரசு, மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பேரம் பேசி நடத்திய கூட்டு சதியின் வெளிப்பாடு தான் இந்த தேர்தல் முடிவுகள்.

தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிப்படி குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும், தொகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனுக்காக கல்வி அறிவை மேம்படுத்துவதற்கும் என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன். அதில் முதல் கட்ட நடவடிக்கையாக புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை பகுதிகளில் குடிநீர் லாரி மூலம், குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு எனது சொந்த செலவில் குடிநீர் வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக 95008 28866, 95667 68638 என்ற 2 செல்போன் எண்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அந்த எண்களுக்கு அழைத்தால் உங்கள் பகுதி தேடி குடிநீர் லாரி வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது சொந்தமாகவே லாரி ஒன்றை வாங்கியும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் 5 பேரை நியமித்து தண்ணீர் வேண்டும் என்று யார் போனில் தகவல் சொன்னாலும் அந்த இடத்தை உறுதி செய்து கொண்டு உடனே அந்த இளைஞர்கள் மூலம் தண்ணீரை உடனே அனுப்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.