அமமுக இன்றைய நிலை என்ன ?

0
Business trichy

அமமுக இன்றைய நிலை என்ன ?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் நடந்த மினி சட்டமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் பதவி பறிக்கப்பட்ட தொகுதிகளாகும்.

 

இவற்றில் சில தொகுதியை  அக்கட்சி தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.மேலும் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் வகையில் அமமுகவின் செயல்பாடு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நடைபெற்ற தேர்தலில் எவ்விதமான மாற்றத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் ஏற்படுத்த முடியவில்லை என்பதை வாக்காளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்

 

Kavi furniture
MDMK

சட்டசபை இடைத் தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் ஒட்டப்பிடாரம் (29228) , திருப்பரங்குன்றம் (31152), அரவக்குறிச்சி(7271), சூலூர் (16445), பூந்தமல்லி (13569), பரமக்குடி(6191), சாத்தூர்(12511), பெரியகுளம்(20685), ஆண்டிபட்டி (22661), மானாமதுரை (19337), தஞ்சாவூர் (19,639), திருவாரூர் (18714), நிலக்கோட்டை (9401), அரூர் (19675), பாப்பிரெட்டிபட்டி(14769), ஆம்பூர் (8856), குடியாத்தம் (8186), சோளிங்கர் (12868), திருப்போரூர் (11936) உள்ளிட்ட 19 தொகுதிகளில் 3 ஆம் இடமும் பெரம்பூரில் 3612( 5ம் இடம்) ஒசூர்1432 (5ஆம் இடம்), விளாத்திகுளம் 9695 4ஆம் இடமும் பெற்றனர்

 

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவிற்கு பதிவான வாக்குகள் 22 லட்சத்து ஆயிரத்து 564 ஆகும்.  5.38% சதவீதம் பெற்றுள்ளனர்

 

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் வாக்காளர்களிடையே கட்சியை கொண்டு போய் சேர்ப்பது தனிக்கலை இதுவரை அதிமுகவில் தொண்டர்கள் எங்களிடம் உள்ளார்கள் என்ற கூற்றும் ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதும் என்ன ஆனது என்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரிடம் கேள்வியை எழுப்பியுள்ளது

Pranav city

Leave A Reply

Your email address will not be published.