வெட்டி வா என்றால் கட்டி வருபவர் தான் நேரு !

0
1 full

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நாள் முதல் முடியும் வரை காலை 5.00 மணிக்கு எழுந்து தான் பெரிதும் நேசிக்கும் வயலுக்கு சென்று திரும்பி காலை 7 மணிக்கு அட்டவணை படி அந்த இடத்தில் சென்று நிற்பார் , சில சமயங்களில் பிரச்சார வாகனம் கூட வந்திருக்காது ஏன் வேட்பாளரே கூட வராமல் இருப்பார் , வேட்பாளர் வரும் வரை டென்சன் ஆகாமல் வேட்பாளர் வரும் வரை அந்த ஒன்றிய செயலாளர் பகுதி செயலாளர்கள் என நிர்வாகிகளிடம் தேர்தல் பணி குறித்த அறிவுரைகளை கூறி காலை 9.30 மணி வரை திருச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்வார் , பிறகு சாப்பிட்டு 10 மணிக்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் காடுவெட்டி தியாகராஜன் அவர்களுக்கு போன் செய்து எந்த ஏரியாவில் இருக்கீங்க என கேட்டு எவ்வளவு தூரம் ஆனாலும் காற்றை கிழித்து கொண்டு காரை இயக்க வைத்து ஸ்பாட்டிற்கு சென்று
பெரம்பலூர் தொகுதியில் 1.30 மணி வரை கள பணியாற்றி மீண்டும் 4 மணிக்கு கரூர் தொகுதி என பம்பரமாக சுழன்று தேர்தல் பணி ஆற்றினார்.

களத்தில் உக்கிரமாகவும் இருப்பார் , தேவையான இடங்களில் கேலி , கிண்டல் செய்து அந்த இடத்தையே கலகலப்பாக ஆக்குவதில் அவருக்கு நிகர் அவர் தான்

2 full

அதே போல ஒட்டபிடாரம் இடைத்தேர்தலில் கிட்டதட்ட ஒரு மாதம் அங்கேயே தங்கி செய்த களப்பணியை உடன் பயணித்து பார்த்து ரசித்து பிரம்மித்தவன் நான் ,

காலை 7.30 மணிக்கு அறையிலிருந்து கிளம்பி தொகுதியை விசிட் செய்வார் , போன் செய்து வருவதை தெரிவிக்காமல் நேரில் சென்று ஆய்வு செய்தார் , சில இடங்களில் உள்ளுர் நிர்வாகிகளுக்கும் வெளியூர் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு வருவதை அறிந்து அழைத்து பேசி சமரசம் செய்வதில் ஆற்றல் மிகு வல்லவர்

ஒரு முறை மதியம் ரொம்ப பசியா இருக்கு சாப்பிடலாம் என ஹோட்டல் அறைக்கு வர உணவு வர 45 நிமிடம் ஆகும் என கூற ஒரு வாழை பழத்தை சாப்பிட்டு கொண்டே காரை நோக்கி நடக்க அனிதா அண்ணன் சாப்பிட்டு ஆரம்பிக்கலாம் என கூற முக்கால் மணி நேரம் வேஸ்ட் ஆகும் பக்கத்துல ஒரு பூத் வேலையை பார்த்துட்டு வரலாம் என்று கிளம்பினார், அப்படி நேரத்தை பயன்படுத்தியவர் நேசமிகு அய்யா

ஆய்வுக்கு சென்ற ஒரு நாள் 10 இளைஞர்கள் அய்யா எங்களுக்கு உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் பண உதவி என கேட்க உடனே பாக்கெட்டிலிருந்து 15000 ரூபாயை தந்தார் , நான் கூட பிறகு அய்யாவிடம் நம்ம தொகுதிக்கு ஏதாவது செய்தால் கூட புரோஜனம் என கூற தலைவர் என்னை நம்பி ஒப்படைத்த தொகுதி வெற்றி பெற வைக்கும் வரை இது என் தொகுதி மாதிரி தான் யா என்றார் கொடை வள்ளல்

அந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் தான் திருச்சி போனார் , தன் தவப்புதல்வர் அறிவுமிகு அண்ணன் அருண் நேரு அவர்களை வரவழைத்து இரு நாட்கள் நிர்வாகிகளோடு களப்பணி ஆற்ற வைத்தார்

அய்யாவின் அன்றாட தேர்தல் பணிகளை தினமும் அவரது சமூக வலையதளங்களில் பதிவேற்றினேன் படங்களை பார்த்தவங்களுக்கு இந்த பதிவு புரியும்

இடையே இரு நாட்கள் காய்சல் வேறு , ஊசி போட்டு களபணி செய்தார்
வெற்றியை சமர்பிக்கும் வரை ஓயவில்லை

வெட்டி வா என்றால் கட்டி வருபவர் தான் நேரு என்று தலைவர் கலைஞர் புகழாரம் சூட்டியது நினைவிற்கு வருகிறது

-முத்தமிழ் கருணாநிதி

3 half

Leave A Reply

Your email address will not be published.