பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1344-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய திருச்சி !

0
Business trichy

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1344-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய திருச்சி !

இந்திய அளவில் எம்.பி. தேர்தல் பரபரப்பாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1344 வது பிறந்தநாள் விழாவை அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாண்டமாக கொண்டாடினார்கள்..

web designer

1344-வது பிறந்த நாளையொட்டி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு, அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் சிவராசு மரியாதை செலுத்தினார். மேலும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

loan point

திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானா பாரதிதாசன் சாலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச்சிலை அமைந்துள்ளது. நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் பெரும்பிடுகு முத்தரையரின் 1344-வது பிறந்தநாள் விழாவினையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல் மரியாதை செய்யும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு

தற்போது தமிழக அரசு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் மற்றும் அதில் நூலகம் ஒன்றும் அமைப்பதற்கும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், திருச்சி (மேற்கு) தாசில்தார் ராஜவேல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.தி.மு..-தி.மு..

திருச்சி மாநகர் மாவட்ட .தி.மு.. சார்பில் மாவட்ட செயலாளர் .குமார் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல முன்னாள் அமைச்சர் கு..கிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் தொகுதி .தி.மு.. எம்.எல்.. பரமேஸ்வரி முருகன் ஆகியோர் தனித்தனியாக வந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதுபோல தி.மு.. தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருநாவுக்கரசர் மாலை அணிவிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் துரை.திவ்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.தி.மு..-தே.மு.தி..

திருச்சி மாவட்ட .தி.மு.. சார்பில் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டடது. இதில், புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தே.மு.தி.. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை யில் மாலை அணிவிக்கப் பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் குணா தலைமையில் நிர்வாகிகள் கே.டி.தனபால் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து வணங்கினர்.

முத்தரையர் சங்கங்கள்

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி மற்றும் முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆர்.வி. ராம்பிரபு, ஆர்.வி. பரதன், ஆர்.வி.பாலமுருகன், எஸ்.வி.ஆர். ரவிசங்கர், தர்மராஜ், தங்கசாமி, செவந்திலிங்கம், என்ஜினீயர் பாலாஜி, நடுக்கரை சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் பேரரசர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். இதில் மாணவரணி குருமணிகண்டன், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் .சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபோல முத்தரையர் எழுச்சி சங்கம் சார்பில் மாநில கவுரவத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்பினர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

திருச்சி நாடார் பேரவை சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச்சிலைக்கு, தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கவுரவ தலைவர் ஜெயராஜ், பொதுச்செயலாளர் எஸ்.ராஜ்குமார், அவைத்தலைவர் ஜெனிடிக்ஸ், மாநகர் அமைப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ஜெயபாலன், ஊடகத்துறை சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.