தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

0
1 full

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து 11 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது 4 மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகள் பெற்று, 4 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2 full

நடந்த முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கோட்டைகளான மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.

தமிழகத்தில் 2 தொகுதிகள் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதி என வெறும் மூன்றே தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளன . ஏற்கனவே 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்க வேண்டிய அபாயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தின் 2 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது . இதனால் அக்கட்சிக்கும் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.