திருச்சி ‘சிட்டி கிளப்’ வீழ்ந்த வரலாறு

0

உண்பது, உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் காலத்தை கடவுள் ஒருவனுடைய வாழ்நாளில் இருந்து கழித்து விடுகிறார். ஆனால் கிளப்புகளில் பொழுதுபோக்கும் நேரத்தை அவனுடைய வாழ்நாளில் இருந்து கழிப்பதில்லை..

இது வின்சன்ட் சர்ச்சில் கூறியது…


திருச்சியில் பல கிளப்புகள் உள்ளன. திருச்சியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் மிகப் பழமையானது சிட்டி கிளப்.
1896-ம் ஆண்டு திருச்சியில் இருந்த ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கிற்காக அன்றைய திருச்சி கலெக்டராக இருந்த தத் என்பவரால் சிட்டிகிளப் தொடங்கப்பட்டது. இந்த கிளப்பில் திருச்சியில் உள்ள வக்கீல்கள், டாக்டர்கள்,தொழிலதிபர்கள் போன்ற உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

கிளப்பின் கட்டிடத்திற்கு 1913ஆம் ஆண்டு திருச்சி கலெக்டராக இருந்த நாராயண ஐயர் அடிக்கல் நாட்டினார். இதன் பிறகு 1925 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கிளப்பின் முதல் செயலாளராக கோபால்ராவ் இருந்தார். 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் சர்.சி.பி ராமசாமி ஐயர் சிட்டி கிளப்பின் படிப்பகத்தை திறந்து வைத்தார். திருச்சியில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக சிட்டி கிளப்பை சொல்லலாம்.

 

இதன் பதிவு எண் 1/1025 கிளப் ஆரம்பிக்கப்பட்டபோது டென்னிஸ் மட்டும் விளையாடப்பட்டது.இதன் பின்னர் பில்லியர்ட்ஸ்,டேபிள் டென்னிஸ்,கேரம்போர்ட் போன்ற விளையாட்டுகள் விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தற்சமயம் டென்னிஸ் விளையாட்டிற்காக இரண்டு மைதானங்களும் டேபிள் டென்னிசுக்காக இரண்டு கோர்ட்டுகளும் வில்லியர்சுக்காக ஒரு கோர்ட்டும் உள்ளது ஷட்டில் விளையாட்டிற்காக ஒரு உள்ளரங்கம் கட்டும் முயற்சியையும் எடுத்து வருகின்றனர்.இங்குள்ள நூலகத்தில் இந்தியாவில் வெளிவரும் அனைத்து ஆங்கில,தமிழ் முன்னணி பத்திரிகைகளும் பல நல்ல நூல்களும் உள்ளன.

 

 

டென்னிஸ்,செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு மாநில அளவில் உள்ள பல்வேறு சங்கங்களில் உறுப்பினராக சிட்டி கிளப் உள்ளது. கிளப் தொடங்கிய காலத்தில் இருந்து மாதம் ஒரு முறை பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடந்து வருகிறது.மேலும்,மேஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சிட்டி கிளப்பில் திருச்சியில் உள்ள அத்தனை விஐபிக்களும் உறுப்பினராக இருந்துள்ளனர். டென்னிஸ் டேபிள் டென்னிஸ் பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளுக்காக சிட்டி கிளப் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் மாநில அளவிலான அண்ணாதுரை நினைவு செஸ் போட்டிகளை கடந்த 45 வருடங்களாக நடந்து வருகிறது. உலக அளவில் பிரபலமான பிரிட்ஜ் போட்டிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது.

food

இந்த செஸ் போட்டியை ஆரம்பித்தவர் முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் தர்மலிங்கம். இவர் சிட்டி கிளப்பின் தலைவராக இருந்தபோது இந்த போட்டிகளை தொடங்கினார். அன்பில் தர்மலிங்கம் குடும்பத்தினரின் சொந்த செலவில் சிலர் கேடயம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. சிட்டி கிளப்பில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நீல் பிரேசர் மற்றும் இந்தியாவின் முன்னணி வீரர்களான ராமநாதகிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ்,விஜய் கண்ணன்,ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

டென்னிஸ் கோர்ட்டில் இரவு நேரங்களில் போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக ரூ.4 லட்சம் செலவில் ஒளிவெள்ளத்தை அளிக்கக் கூடிய அதிநவீன விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள், மன மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது. பல்வேறு சமுதாயப் பணிகளையும் சிட்டி கிளப் செய்து வருகிறது. தேசிய அளவில் ஏற்படும் பேராபத்துகளான வெள்ளம்,பூகம்பம், கார்கில் போர்,சுனாமி போன்ற பாதிப்புகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. திருச்சியில் சிட்டி கிளப் தவிர யூனியன் கிளப் ஆபீசர்ஸ் கிளப் என்ற பழமையான கிளப்புகளும் உள்ளன.

 

இடிக்கப்பட்ட 120 ஆண்டுகள் பழமையான சின்னம்

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக நகர சங்க கட்டிடங்களை இடிக்கப்போவதாக
16-ம் தேதி அறிவிக்கை அனுப்பி, 17-ம் தேதி அதிகாலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நகர சங்க நிர்வாகிகள் மாற்று இடம் கேட்டும் மாவட்ட நிர்வாகம் கொடுக்காமல் அதிரடியாக கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியது.

தடுக்க முயன்ற சங்கத்தின் தலைவர் பர்மா கேசவன், துணைத்தலைவர் மலர் செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100 பேரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.