கோடையில் சிக்கன்; வேண்டவே வேண்டாம்!

0
1 full

கோடை காலத்தில், உடலானது அளவுக்கு அதிகமான உஷ்ணத்தில் தகிக்கும். ‘சாதாரணமாவே நம்ம ஹீட்பாடி. இதுல இந்த வெயில்ல இன்னும் ஜாஸ்தியாகி தாங்கமுடியலப்பா’ என்று புலம்புவர்களே இங்கு அதிகம்.

இந்த நிலையில், கோழி, கருவாடு முதலானவற்றை இந்தக் கோடையில் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் .

வருடாவருடம், நமக்கெல்லாம் வயது ஏறுவதைப் போல, கோடையின் தாக்கம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்கினி நட்சத்திரம் வருவதற்கு முன்னதாகவே, திருத்தணி, திருச்சி, கரூர், சேலம், வேலூர் என பல ஊர்கள் தினமும் செஞ்சுரியைத் தாண்டி, அனல் கக்கிக் கொண்டிருக்கிறது.

2 full

தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் கல் ஏற்படுவதை தடுக்கலாம். உடல் உஷ்ணத்தையும் தணித்துக்கொள்ளலாம். நீர்ச் சத்துள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி முதலானவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் காலையிலும் மாலையிலும் அல்லது காலையிலும் இரவிலும் குளிப்பது இந்தக் கோடை உக்கிரத்துக்கு மிகவும் நல்லது.

கோடை வெயிலின் போது, சிக்கன் முதலான அசைவங்களை சாப்பிட்டால், உடலில் மேலும் உஷ்ணம் பரவும். இதனால், உடலானது வெப்பத்தைத் தாங்கமுடியாமல் போகும். மேலும் வயிற்றுப்போக்கு முதலான உபாதைகள், மூலம் முதலான பிரச்சினைகள் வரக்கூடும். பொதுவாகவே, கோடைக் காலத்தில் கார உணவுகளைத் தவிர்ப்பதே ரொம்ப ரொம்ப நல்லது.

3 half

Leave A Reply

Your email address will not be published.