உயர்பதவியை நிராகரித்த கே.என்.நேரு

0
Business trichy

3-ம் எண்ணால் உயர்பதவியை நிராகரித்த கே.என்.நேரு

கே.என்.நேரு (பிறந்த தேதி 9-11-1952)
இவரின் பிறந்த தேதி எண் 9. இது போர்க்கடவுள் செவ்வாயைக் குறிக்கும். செவ்வாய் இராணுவம், காவல்துறை, அரசியல் துறையில் முதல் வரிசையில் இருக்கும் தலைவர்களைக் குறிக்கும். எண் 9 கட்டுமானத்தையும் குறிக்கும். உய்யகொண்டான் தொட்டி பாலம் இவர் அமைச்சராக இருக்கும் பொழுது கட்டப்பட்டது.

கே.என்.நேரு எண் 9க்குரிய(செவ்வாய்) அத்தனை குணமும் ஒருங்கே பெற்றவர். ஒருவரிடம் தட்டி கொடுத்தும் வேலை வாங்குவார். அதட்டியும் வேலை வாங்குவார். இவர் ஒரு இராஜதந்திரி. இலாபம் சண்டையிலா, சமாதானத்திலா என்று உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் செயல்படுவார்.
உதாரணம்: திமுக ஆளும் கட்சியாக இருந்தபொழுது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரை திமுகவிற்கு அழைத்து வந்தார். அதனால் ஜெயலலிதாவின் கோபத்திற்கும் ஆளானார்.

Kavi furniture

திமுகவிற்கு ஆதரவு தராததால் தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அணியில் இருந்த, திருச்சி மாவட்டத் தலைவர் கோவிந்தராஜுலு மற்றும் மாநில பொறுப்பாளர் விக்கிரமராஜா ஆகிய இருவரையும் பேரவையில் இருந்து வெளியேற வைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்ற அமைப்பு உருவாக்க காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கே.என்.நேரு.

இது போன்று சில நேரங்களில் கட்சிகள், சங்கங்கள் என தனக்கு சாதகமாக வராதவர்களை தன் அரசியல் பலத்தை வைத்து, அவர்களை உடைத்தோ, பிரித்தோ அவர்களின் செல்வாக்கை நிர்மூலம் ஆக்குவார். கே.என்.நேருவின் பெயரை கேட்டால் ஆளும் கட்சியினரே பயப்படும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகளை சுட்டுப்பிடிக்க மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கும் உத்தரவிட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கே.என்.நேருவின் பிறந்த தேதி 9 அதன் இராசி எண் (POLICE = 8+7+3+1+3+5 = 27= 9).
எண் 9 பூமிக்காரன். அதனால் இவர் வகித்த பதவி மூலம் கட்டிடங்கள் நிலங்கள் வாங்குவதில் ஆச்சரியம் இல்லை.

MDMK

கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் (K.N.RAMAJAYAM(2+5+2+1+4+1+1+1+1+1+4=23=5))
பிறந்த தேதி 22-9-1961

4 & 3 கே.என் ராமஜெயம் பிறந்ததேதி 22=2+2=4.
இது இராகுவை குறிக்கும். இது எண் 9 செவ்வாயின் எதிர் எண் ஆகும். எண் நான்கு நிலப்பரப்பை பிடிக்கக் கூடியது. இவர் தன் குடும்பத்திற்கு அதிக அளவில் நிலங்கள், கட்டிடங்கள் பிடித்து தங்கள் குடும்பச் சொத்தாக்கினார். இது நேருவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.
கே.என்.ராமஜெயம் கெட்ட நேரம் வரும் பொழுது தண் அண்ணன் கே.என்.நேருவை விட்டு விலகி இருக்க வேண்டும். விலகாததால் விதி அவரை நிரந்தரமாக பிரித்தது.

K.N.RAMAJAYAM (2+5+2+1+4+1+1+1+1+1+4=23=5)
எண் 5ல் எண் 23 இராஜவசிய எண்ணாகும். தான் நினைத்ததை சாதிக்கவும், அடையவும் துடிக்கும் எண் ஆகும். தன் திட்டங்கள் சாதிப்பின் மூலம் கட்சியினரை கவர்ந்தார் கே.என்.இராமஜெயம்.
ஒரு கட்டத்தில் இவரை கட்சியினர் M.D. என்று அழைத்தனர். M.D. =4+4=8 MD என்றால் எண் 8ஐ குறிக்கும். எண் 8 பெயரில் வருவது அவமரியாதையையோ, அசிங்கத்தையோ கொடுக்கும் அல்லது கொடூரமாக உயிரைப் பிரிக்கும். MD என்று அழைத்தபின்தான் கே.என்.இராமஜெயம் சாம்ராஜ்ஜியம் சரிவு ஏற்பட்டது.

கே.என். நேருவின் பிறந்த தேதி 9ம் எண், பெயர் எண் 3ம் தமிழ்நாட்டுக்கு (எண் 2க்கு) எதிர் எண் ஆகும். அதனால் தனக்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை தான் அசிங்கப்படுத்தப்படுவோம் என்று எண்ணி கே.என்.நேரு மறுத்தார்.

கே.என் நேருவின் பெயரின் கூட்டு எண் 3. இவ்வெண் குருவைக் குறிக்கும். இவர் தலைமைக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் உள்ளார். எண் 3க்கு எண் 6 பகை அதனால் கே.என்.நேருவிற்கு 6ல் பிறந்த திருச்சி சிவா எதிரானவராக இருப்பார். அதேபோல், கே.என். நேருவை சுற்றி இருப்பவர் 3ம் தேதிகாரர் அதிகம்.

தொடரும்…

Pranav city

Leave A Reply

Your email address will not be published.