மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறையின் பன்னாட்டு வல்லுநர்கள் பங்கேற்கும் IEEE கருத்தரங்கம் 

0
D1

திருச்சியில் முதன்முறையாக தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், மே 22 – 24 2019,  தேதிகளில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறையின் பன்னாட்டு வல்லுநர்கள் பங்கேற்கும் IEEE கருத்தரங்கம்  நடைபெற உள்ளது.

N2

அறுபது வருடங்களில் முதன்முறையாக, தேசிய தொழில் நுட்பக்கழகம் திருச்சியின், மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியற்துறையில் சர்வதேச IEEE கருத்தரங்கம் டெக்யுப்-ன் உதவியுடன் மேமாதம் 22 முதல் 24வரை நிகழவிருக்கிறது. ஆண்டெனா, கம்பியில்லா தகவல்தொடர்பு, நுண்ணலைப் பொறியியல் மற்றும் ஒளியியல் துறையின் விஞ்ஞானிகள் இக்கருத்தரங்கில் பங்குபெறுவர். 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உலகில் அமெரிக்கா, பிரான்சு,  சிங்கப்பூர்,  இங்கிலாந்து வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து EDAS இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலிருந்து 190 ஆய்வுக்கட்டுரைகள் (65 விழுக்காடு) சோதனைக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவை IEEE XPLORE இன் இணையதளத்தில் பதிவேற்றப்படும். சமீபத்திய உலகத்தர ஆராய்ச்சிகள் மட்டும் IEEE xplore தளத்தில் இடம்பெறும். முக்கியப் புரவலராக கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மினிஷா ஜிதாமஸ், முதன்மை புரவலராக முனைவர் எஸ். ராகவன், தலைமை ஒருங்கிணைப்பாளராக துறை முதல்வர் முனைவர். லக்ஷ்மிநாராயணன், IEEE ஆண்டெனா மற்றும் அலை செலுத்துதல் குழுத்தலைவர் முனைவர் .எஸ்.எஸ்கார்த்திகேயன் அவர்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. துணைத்தலைவர்களாக ஜப்பான்நாட்டு IEEE பிரமுகரான முனைவர் முகமது, அறிவியலாளர் திரு.நருசிங்கசாரான்பிரதான் மற்றும் IIT டெல்லி பேராசிரியர் ஷிபான்கவுல் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் கருத்தரங்கிற்கு முன்பு, உருவாக்குதல் ஆய்வுக்கூடம் பற்றியும், நுண்ணலை மின்சுற்றுகளின் வடிவமைப்பிற்கு தேவையான matlab, FSS மற்றும் மெட்டா பொருட்கள் போன்ற தலைப்புகளில் தேசியபாதுகாப்பு ஆய்வுக்கூடங்களில் பணிபுரியும் வல்லுநர்களால் தொழிற்பட்டறைகள் நடக்கவிருக்கிறது. தொழில் முறை பயிற்சி வேண்டும் ஆராய்ச்சியாளர்கள் IMICPW ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://imicpw.nitt.edu/  இணையதளத்தை அணுகுங்கள்.

கருத்தரங்கின் துவக்கவிழாவில் DRDO தலைமையும் பாதுகாப்பு செயலருமான சதீஷ்ரெட்டி பங்கு பெறுவார்கள். முன்னாள் drdo தலைவர், முனைவர் கிறிஸ்டோபர், அமெரிக்க ஆண்டெனா மற்றும் அலைச்செலுத்துதல் குழுமத்தின் முன்னாள் தலைவர் முனைவர் தபன்குமார் சிர்கார் மற்றும் பல IIT, IISC  சார்ந்த பேராசிரியர்கள் உரையாற்றுவார்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.