பொது குடிநீர் பைப்சண்டையில் கட்டையால் அடித்து பல் உடைப்பு

0
Business trichy

திருச்சி அடுத்த லால்குடி அருகில் ரெட்டிமாங்குடி கிராமத்தில் பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்த தகராறில் கட்டையால் அடித்து பல் உடைப்பு.

web designer

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடி ஊராட்சியில் தச்சங்குறிச்சி சாலை தெற்கு தெருவில் வசிக்கும் சுப்ரமணியன் மனைவி மருதம்பாள். வயது 34 இவர் கடந்த 12.05.2019 அன்று அவர் வீட்டுக்கு முன்பு உள்ள பொது குடிநீர் பைப்பில் காலையில் குடிதண்ணீர் பிடிக்க சென்று குடிநீர் பிடிக்கும் போது இவருக்கு பின்னால் வந்த அதே பகுதியை சேர்ந்த மருதை மனைவி அங்கம்மாள் வயது 60. இவர் நான் வரும் பொழுது பைப்பில் நான் தண்ணீர் பிடிப்பதற்கு இடம் விடாமல் எப்படி நீ தண்ணீர் பிடிக்கலாம் என்று தண்ணீர் பிடிக்கும் பாத்திரத்தை எடுத்து தூக்கி வீசி உள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அங்கம்மாளின் மகள் மல்லிகா வயது 30. இவர் எனது அம்மா தண்ணீர் பிடிக்க வரும் பொழுது நீ எப்படி தண்ணீர் பிடிக்கலாம் என்று மருதம்பாளிடம் தகராறு செய்து அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரம்மாரியாக அடித்ததில் மருதம்பாளுக்கு மூன்று பற்கள் உடைந்து விட்டதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அருகில் உள்ளவர்கள் மருதம்பாளை தூக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் ளுசுஆ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பிறகு சிறுகனூர் காவல் நிலையத்தில் தகவல் தெருவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சிறுகனூர் போலீ;சார் சம்பவ இடத்தை வந்து பார்த்து விசாரணை செய்து உள்ளனர்.  மேலும் பாதிக்கபட்ட மருதம்பாள் தற்பொழுது உடல் நிலை பாதிக்கப்பட்டு பாடாலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12 ம் தேதி நடந்த சம்பவத்தில் பாதிக்கபட்டோருக்கு மனுரசீதும் தரப்படவில்லை. அடித்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. ஆகவே சிறுகனூர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருதம்பாளை தாக்கியவர்கள்  அங்கம்மாள் , மல்லிகா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்டோரின் வேண்டுக்கோள்.

சிறுகனூர் காவல்நிலையம் நடவடிக்கை எடுக்குமா?

IAS academy

Leave A Reply

Your email address will not be published.