இப்படி தான் அலட்சியப்படுத்துகிறோம் !

0

32 வருட நட்பு. ஒரே கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தோம். என்னைவிட 10 வருடங்களாவது பெரியவனாக இருப்பான். ஆனால் அதில் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்…(இப்படி சொல்லிக் கொள்ள எனக்கு இப்பொழுது அருகதை இருக்கிறதாவென தெரியவில்லை!).
அழகும் கம்பீரமும் குடிகொண்டிருக்கும் தோற்றம். படு புத்திசாலி. சாதாரண நிலையில் வேலையில் சேர்ந்து ஓய்வு பெறுகையில் கம்பெனியின் நம்பர் 2 நிலையில் இருந்தவன். 1995 இல் நான் அந்தக் கம்பெனியை விட்டு வெளி வந்ததிலிருந்து தான் நாங்கள் நல்ல நண்பர்களாகவே ஆனோம் என்பது எனக்கே ஆச்சர்யம்.

ஒரு முறை என் மேலதிகாரி எதற்கோ என்னை கோபிக்க, ராஜினாமா கடிதம் எழுதி வைத்தி்ருந்த என்னைத் திட்டி கிழித்துப் போட வைத்தவன். எல்லா மனிதர்கள் மேலும் மிகுந்த அக்கறை கொண்டு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கான ஆலோசனை, ஊக்கம் அளிப்பதில் வல்லவன்.
வயதில் மூத்தவனாக இருந்தாலும் கால ஓட்டத்தில் நட்பு பலமானதும் வாடா போடா என்ற அளவிற்கு தான் பேசுவேன். என்னை யாருமே இப்படி கூப்பிட்டதில்லை, நீ தான் திமிரு பிடிச்சுபோய் இப்படி பேசுறனு சொல்வான். நட்புக்குள்ள என்ன வயசு, நான் அப்படித்தான் கூப்டுவேன்னு சொன்னப்புறம் என்ன திருத்த முடியாதுன்னு விட்டுட்டான்.

வாழ்வைப் பற்றிய எங்கள் பார்வைகள் மிகவுமே வித்தியாசப்பட்டது. அதனால் நிறைய வாக்குவாதங்கள் வரும். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு பல மாதங்கள் பேசாமலே இருப்பான். பிறகு திடீரென ஃபோன் செய்து நான் பேசாதவரை நீயும் பேசமாட்ட அவ்ளோ திமிருடி உனக்கு அப்படினு சொல்வான். ஆமாம் நான் அப்படித்தான் இஷ்டமிருந்தா பேசு இல்லனா போனு சொல்வேன்….திரும்ப கோச்சிட்டு திரும்ப பேசமாட்டான்.
இப்படித்தான் போச்சு எங்க ஃப்ரெண்ட்ஷிப் பல வருஷமா. நடுவில் உடல் நிலை சரியில்லாத போனபோது வீடு போய் பார்த்துவிட்டு வந்தேன்.

பிறகு சரியாகிவிட்டான்.ஆனா எப்படியோ கால மாற்றங்களில் கடைசி இரண்டு வருடங்களாக மிகவும் பேச்சுவார்த்தையில்லை. ஆறு மாதங்களுக்கு முன் ஒருவர் மூலமாக மிகவும் உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு ஃபோன் செய்தேன்.

food

என்னை நல்லா திட்டிட்டு நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டுனு சொல்லிக்காதனு சொன்னான். வீடு மாத்திட்டேன்னு சொன்னியே அட்ரஸ் குடுனு சொன்னேன். தேவையேயில்ல நீ வர வேண்டாம்னு சொல்லிட்டு வச்சிட்டான். அட்ரஸ் தேட சில நாள் முயற்சி பண்ணிட்டு முடிலனு நானும் விட்டுட்டேன். ஏனோ ரெண்டு நாள் முன்னாடி எப்படியாவது அட்ரஸ் கண்டுபுடிச்சு சர்ப்ரைசா போய் நிக்கனும்னு தோனுச்சு.

இன்னைக்கு சாயந்திரம் செய்தி அவன் இறந்துட்டதா…. அவன் போனது கூட பெருசா தெரியல…. இப்படி போய் பாக்காம கடைசி வரைக்கும் என் மேல கோபத்துலேயே போக வச்சிட்டமேனு வருத்தமா இருக்கு. குற்ற உணர்ச்சி கொல்லுது.

இப்படித்தான் நாம சில விஷயங்கள அலட்சியப்படுத்தறோம்….அப்புறம் காலம் நம்மள அலட்சியப்படுத்திட்டு போய்டுது. இனி இந்த மாதிரி இருக்க கூடாதுன்னு அவன் மரணம் எனக்கு சொல்லிட்டு போயிருக்கு. அவன் மனைவியும், மகன்களும் இந்த இழப்ப தாங்கி, மீண்டு வரணும்.

 

முகநூலில் எழுத்தாளர் – லதா

gif 4

Leave A Reply

Your email address will not be published.