`விலங்குகளுக்கும் தாகம் எடுக்கும்ல!’ – மன்னார்குடி பெண்ணின் புதுமுயற்சி

0
1 full

நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கான ஆதாரம். கடுமையான கோடையில், நீர்ப் பற்றாக்குறையால் பல இடங்களில் குடிநீருக்கே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Water for voiceless
மனிதர்களுக்கே இப்படியென்றால், நிலையில்லாத காலநிலை மாற்றம் மற்ற உயிர்களின் நீர் ஆதாரங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமூக வலைதளங்கள் உட்பட உயிரினங்களின் தண்ணீர் தேவை குறித்த பேசுபொருள் நிலவினாலும், அதற்கான தீர்வை நோக்கி முயன்றிருக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த ‘ஷாந்தினி’. ‘Water for Voiceless’ என்ற பெயரில் நாய், குருவி உட்பட நம் எதிரே நீருக்காகப் போராடும் உயிரினங்கள், சுலபமாக நீர் அருந்தும் வகையில் ஒரு நீர்த்தொட்டியைத் தயார் செய்கிறார். இதைப் பல இடங்களில் இலவசமாக விநியோகம் செய்தும் தன்னார்வலர்களுக்கு வழங்கியும் வருகிறார்கள் இவரும் இவரது குழுவும். இது மன்னார்குடி வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுகுறித்து அவரிடம் பேசினோம்,

2 full

Water for voiceless

“அப்போதுதான் ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். தொட்டி வைக்க விரும்புபவர்கள், விலங்குகள் ஆர்வலர்கள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தேன். என் நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பண உதவி பெற்று, சிமென்ட் தொட்டி செய்யும் இடத்தில், இநந்த் தொட்டியை ஏதுவாக உருவாக்கினேன். தொட்டி வேண்டும் என்பவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தே வழங்கினேன். ‘வாங்குபவர்கள் அலட்சியப்படுத்தாமல் எப்போதும் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளாதவர்களுக்குத் தொட்டி இல்லை என்றேன். பலரும் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். ஆரம்பத்தில், இது தேவையா என்று பலர் கூறினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுப்பெற்று, பலரும் பாராட்டுகிறார்கள்’ என்கிறார்.

முதல்கட்டமாக 50 தொட்டி என்று தொடங்கிய இவர் பணி, இப்போது மன்னார்குடி – தஞ்சாவூர் என்று பலரின் வேண்டுகோளின் பேரில் அடுத்தடுத்து பரவலாகிறது. இதற்குப் பெறுபவர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமோ பணம் பெறவில்லை. விலங்குகள் மீதான தன் அக்கறையின் வெளிப்பாடாகவே இதைச் செய்கிறார். விலங்குகளை ஒரு இடத்தில்கூட அஃறிணையோடு குறிப்பிடாமல் பேசும் ஷாந்தினி, ‘எல்லா உயிர்களுமானதுதான் இந்த உலகம். விலங்குகள் அழிவை நோக்கிச் செல்லும்போது, அவர்களை மீட்பதற்கான பொறுப்புணர்வு நமக்கு உள்ளது” என்கிறார்.

 

-விகடன்

3 half

Leave A Reply

Your email address will not be published.