நேற்று பார்த்த Mr.லோக்கல் படம் பத்தி விமர்சனம்

0
1

நேற்று பார்த்த Mr.லோக்கல் படம் பற்றிய பேச்சு (விமர்சனம் எழுதும் அளவிற்கு ஒண்ணுமே இல்லை )

படத்தின் இயக்குனர் ,மற்றும் தயாரிப்பாளர் பேச்சு

இய: சார் சிவா எனக்கு கால்சீட் குடுத்து இருக்கார் படம் பண்ண .. நீங்க சில கோடி குடுத்து நயன்தாரா கால்சீட் வாங்கி விடுங்க

2

தயா:- கதை என்னங்க ?

இய:- நீங்க முதலில் பாரிஸ் நகருக்கு ஒரு பத்து பதினைந்து டிக்கெட் வாங்கி வைங்க சீக்கிரமா , இப்பவே பண்ணா விலை குறைவா இருக்கும்

தயா :- கதை

இய:- அதாங்க முக்கியம் .. சீக்கிரமா நயன்தாராவுக்கு தோள்பட்டை முழுக்க தெரிகிற மாதிரி ஒரு அஞ்சு டிரஸ் ரெடி பண்ணுங்க

அப்பறம் .. ம்ம்ம் … கதாநாயகன் இருக்கிற வீடு ஹௌசிங் போர்டு காலனி.. ஆனா ஒரு பெரிய சோபா நிறைய திரைசீலைகள் போட்டு விடுவோம் செலவு கம்மி

தயா : அப்பாடா செலவு கம்மியா நன்றீங்க

இய: ஆனா பாருங்க கதாநாயகி பணக்காரின்னு காண்பிக்க ஜாகுவார் கார் அப்படியே பெரிய கண்ணாடி நிறைய உள்ள ஒரு ஆபீசு செட்டு எல்லாம் போடணும் சில கோடிகளை எடுத்து வட்சுக்கொங்க

அவங்க ரெண்டு பெரும் இவ்வளவுதான் பேசி இருப்பாங்க ..படம் எடுத்து நமக்கு காட்டி விட்டார்கள்

பாரிஸ் நகரை பார்க்க (aerial view of Paris city ) என்று யூடுபில் பார்த்துக்கொள்ளவும் , முதல் சில நிமிடங்கள் அதே ..

இந்த படத்தை பற்றி … சில விசயங்கள் ..

இது 1960 களில் வந்த பெண்ணின் படிப்பு மற்றும் அவளின் சுயசார்பு பற்றிய எதிர்ப்பு மனப்பான்மையை பற்றியது ..

பணக்கார பெண் கெட்டவ அவளை அடக்க வேண்டும் ….@#$%^&

மேலும் எம்ஜியார் படத்தில் (எங்கவீட்டு பிள்ளை படத்தில் ஏழ்மை இரண்டாம் கதாநாயகி பணக்கார ரெங்கராவ்விடம் பேசும் வசனம் ..நாங்க ஏழைங்க நல்லவங்க நீங்க பணக்காரங்க என்னவானா பண்ணுவீங்க )

அதே போல வர்க்க போராட்டம் நீங்க மிடில் கிளாஸ் நாங்க பணக்கார கிளாஸ் போன்ற அபத்த வசனங்க

நடிப்பு :-

சிவகார்த்திகேயனின் , ஒரே மாதிரி வாய் அடிக்கும் (அடுத்தவரை பேச விடாமல் .. டைரக்டர் அதையே துணை நடிகர் சதீஷை சொல்ல வச்சு இருக்கிறார் ) நடிப்பு , + வழக்கம் போல மிம்மிக்கிரி .. பாவம் கதை இல்லை என்ன செய்வார்

நயன்தாரா … வயசு முகத்தில் தெரிகிறது .. சிவா கார்த்திகேயனின் அக்கா போன்ற தோற்றம் மேலும் அவரது மேட்டுக்குடி பாத்திரத்திர்க்காக முகத்தை சீரியஸ்ஆகா வைத்து கொண்டு இருப்பதால் ஒரு காதல் நாயகி மாதிரி இவர்கள் இருவருக்கும் இடையே நடப்பதை ரசிக்க முடியவில்லை

முதல் பாகத்தில் காணப்பட்ட பல காமடி பாத்திரங்களை இன்டர்வெல் அப்பறம் காணோம் ..

படம் பல பணம் படைத்தவர் கை மாறி இருப்பதால் (வரிசையாக படம் ஆரம்பிக்கும் முன்பு கம்பெனி பெயர்கள் வருகின்றன ) கதையும் பல அடித்தல் திருத்தல் ஆகி இருப்பது புரிகிறது

என் மகள் Shrinidhi Vijayaraghavan இந்த மாதிரி ஒரு பெண் இருக்க முடியாமா என்று கேட்டா ..

ஆம் வினோதம் .. சிவா கார்த்திகேயன் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் “ராதிகா சரத்குமார் ” இந்த காதாநாயகி கதாபாத்திரம் நயன்தாரா நடிக்கும் டிவி சீரியல் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்துகிரவர்தான் ..

இந்த கதையில் சொல்லுகிற கதாநாயகி மாதிரி ராதிகா லண்டனில் படித்தவர்தான் , இந்த கதையில் சொல்லுகிற படி சுமார் சில நூறு கோடி சொத்துக்கு அதிபதிதான் என்றேன்

ஆனால் அவர் அப்பாவி அம்மாவாக நடித்து இருக்கார் … கதாநாயகியோ.. அலட்டல் நடிப்பு

திரைக்கும் நகலுக்கும் வித்யாசம்

ராதிகா ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாரின் அபிரிமிதமான பக்தை மாதம் ஒரு முறையாவது அவரது அம்மா (நாத்திகவாதி எம் ஆர் ராதாவின் மனைவி ) உடன் வருவார் ..
i have great regards for her success and humble behavior, even with such a great back ground of political stalwart father and big success (except few bad political mis adventures )

இன்னும் ரெண்டு படம் சிவா இப்படி நடித்தா மறுபடியும் லோக்கல் பையனாக திருச்சியில் எதுனா வேலை தேடி வரவேண்டி இருக்கும் (படத்தினோட டைட்டில் இதில் ஏன் வரவில்லை என்று கேட்டா .. அதான் )

விஜயராகவன் கிருஷ்ணன்

3

Leave A Reply

Your email address will not be published.