இலங்கையில் குண்டு வெடிப்பு ராஜபக்சே மீண்டும் அதிபராக நடத்தப்பட்ட சதியா ?

0
1

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் இலங்கையில் 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து ஒருவார காலம் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து இலங்கையில் பல நகரங்களிலும் தங்கும் விடுதிகளிலும் நடைபெற்றுள்ளது. இதில் இலங்கை அரசு அறிவித்தபடி சுமார் 350பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் அதிபர் மைத்ரிபாலச் சிறிசேனா பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தினார். பின்னர் இலங்கையில் அவசரநிலை அமல் செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 

இந்நிலையில், ஏப்ரல் 24ஆம் நாள் இலங்கையின் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “7 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் ஒரு பெண் உட்பட 9 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இலங்கையின் ஐஎஸ் ஐஎஸ் என்னும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
உலகத் தலைவர்கள் பலரும் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள ்ளனர். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அதிகாரி இந்தத் தாக்குதல் குறித்துப் பேசும்போது, “புனித வெள்ளியைத் தொடர்ந்து தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ வாய்ப்புள்ளது என்று புலனாய்வு செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்தோம். அவர்கள் அலட்சியமாக இருந்ததன் விளைவே இந்தக் குண்டுவெடிப்பு” என்று குறிப்பிட்டார்.

 

கடந்த மாதத்திற்கு முன்பு காஷ்மீரில் பாதுகாப்புகள் நிறைந்த இராணுவ முகாமில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 41 இராணுவவீரர்கள் இறந்தபோது, புலனாய்வு துறை தன் கடமையை ஏன் செய்யத் தவறியது என்று மக்கள் எழுப்பிய வினாவிற்குப் பதில் சொல்லாத பாதுகாப்புத் துறை, இலங்கையில் நடைபெறப் போகும் தாக்குதலை எப்படித் துல்லியமாகப் புலனாய்வு செய்தது? என்ற கேள்வி எழுகிறது.

4

முகநூலில், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் இலங்கை குண்டுவெடிப்பு பற்றி பதிவுகள் வெளியிடும்போது, “இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவில்தான் இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தார்கள். மோடி அரசு தீவிரவாதிகள் மீது எடுக்கும் கடுமையான நடவடிக்கைக்கு அஞ்சி இலங்கையில் குண்டுகளை வெடித்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது” என்று தங்கள் பங்குக்குக் கொளுத்திப் போட்டனர்.

2

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம்சுவாமி இந்தக் குண்டுவெடிப்பு பற்றி பேசும்போது, “இந்தத் தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்தினார்கள் என்று இலங்கை காவல்துறை அறிவிக்கும்முன்பு அறிவித்தார். மேலும், இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிக்க மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் கூறுவதுபோல, இலங்கையில் தீவிரவாதத்தை வேரறுக்க இராஜபக்சே மீண்டும் அதிபராக வரவேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
இலங்கையில் மிகவிரைவில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இராஜபக்சே மீண்டும் போட்டியிடுகின்றார். இராஜபக்சே மோடியின் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இராஜபக்சே மீண்டு அதிபராக வருவதை இந்தியா விரும்புகின்றது என்பதைப் பாதுகாப்புத்துறையின் அறிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

 

இலங்கையின் அதிபர் மைத்ரிபாலச் சிறிசேன, மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, சில தீவிரவாதிகள் இஸ்லாம் சமூகம் சார்ந்து இருப்பதால் நாம் ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்தையும் சந்தேகப்படத் தேவையில்லை. இஸ்லாமியர்களும் இலங்கை யின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இஸ்லாமியர்களுக்கு இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பாய் இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்கள் மீது கண்ணை மூடிக்கொண்டு வன்மம் காட்டும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை போன்று இலங்கை வன்மம் காட்டாமல் அன்பு காட்டியதை இந்தியா அவ்வளவாக இரசிக்கவில்லை. குண்டு வெடிப்பு தொடர்பாக இலங்கை இந்தியாவின் உதவியை நாடினால் எல்லா உதவிகளையும் செய்வோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கை இந்தியாவின் உதவியை இதுவரை நாடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகநூல் பதிவு, சுப்பிரமணியசுவாமியின் கருத்துகள், பாதுகாப்புத்துறையின் உதவி கேளுங்கள் என்பது எல்லாம் இந்தியாவை இலங்கை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றதோ என்ற ஐயம் எழுகிறது. இலங்கையின் அதிபராக இராஜபக்சே மீண்டும் வருவதற்காக நடத்தப்பட்ட சதியோ என்ற எண்ணமும் உலக நாடுகளின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது, இலங்கையில் இராணுவப்பிரிவு 41இன் தளபதி யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் விடுதலைப்புலி இராணுவ வீரர்களைச் சந்தித்து உரையாடி இருக்கிறார். அப்போது, “நீங்கள் மண்ணுக்காகப் போராடியவர்கள். மனித உயிர்களை நீங்கள் கொல்லவில்லை. தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு போன்ற துயரமிக்க நிகழ்வுகள் தமிழர்கள் பகுதியில் நடந்துவிடக்கூடாது என்றும் தமிழ் மக்களைக் காக்கும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி வீரர்கள் ஈடுபடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியை நிராகரித்து, இலங்கையின் இராணுவம் முன்னாள் விடுதலைப்புலிகளோடு கரம் கோர்த்திருப்பதன் மூலம் குண்டு வெடிப்புகள் இராஜபக்சேவுக்கு ஆதரவாகவே நடைபெற்றிருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகின்றது.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்