அரசாங்க பேருந்தும் – இந்தியன் தாத்தாவும் – ஷாமா பாமா – 9

0
D1

ஷாமா பாமா… தொடர் – 9

N2

(ஷாமா,பாமா இருவரும் தி.நகருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்கள்)
பாமா அப்பப்பா…என்ன வெயில்.
ஷாமா வெயிலை விடு. சென்னை டவுன் பஸ் என்ன குப்பைத்தொட்டி மாதிரி இருக்கு. திருச்சி டவுன் பஸ் எவ்வளவு நன்னா இருக்கும்.
அஷ்வின் திருச்சில பிரைவேட் டவுன் பஸ் நல்லா இருக்கும். ஆனா கவர்மெண்ட் டவுன் பஸ் நல்லா இருக்குமா?
ஷாமா ஆமா சரியா சொன்ன எல்லா ஊர்லயும் கவர்மெண்ட் டவுன் பஸ் சரியில்ல தான். ஆனால் சென்னை டவுன் பஸ் நிலைமை ரொம்ப மோசம்.
ப்ரியா எஸ்…அது என்னவோ வாஸ்தவம்தான்.
ஷாமா: நானும் பாமாவும் எம்27 பஸ்ல போனோம்.பஸ் டிரைவர் ஒரு கையில ஸ்டீரிங்கையும், ஒரு கையில கீரையும், பிடிச்சுண்டு ஓட்டினார். கீர் லேந்து டிரைவர் கையை எடுத்தா கீர் தான விழுந்துடும். பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
ப்ரியா அப்படியா… மாமா ஐயோ!
பாமா ஆமா…ப்ரியா அது மட்டும் இல்ல கிளட்ச்,பிரேக், ஆக்சிலேட்டர், இதை எல்லாம் டிரைவர் ரொம்ப அழுத்தினால் தான் வொர்க் ஆகுது…
ப்ரியா அச்சச்சோ..!
ஷாமா ஹாரன் இல்லை,சீட் சரியில்லை,வண்டி லொடலொடன்னு ஆடிண்டே இருக்கு.இதையெல்லாம் சென்னை டிப்போ அதிகாரியும், சூப்பரவைசரும், கண்டுக்க மாட்டாளா?
அஷ்வின் அவங்க இதையெல்லாம் பார்த்து வண்டி சரியில்லன்னு மேலிடத்திற்கு சொன்னா என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியாதாப்பா?
ஷாமா ம்ம்ம்… உடனே சஸ்பண்ட்தான்.
ப்ரியா உண்மையா வேலை பார்த்தா சஸ்பெண்டா… என்ன கொடும?
ஷாமா ஆமா….வண்டி சரியில்லாம ஆக்சிடென்ட் ஆச்சுனா அப்பாவி டிரைவர் மேல பழி போட்டுட்டு போக்குவரத்து கழகம் யெஸ் ஆயிடுவா…
கௌதம் இந்தியன் படத்துல வர மாதிரி…
ஷாமா ஆமா…போக்குவரத்து நஷ்டத்தில் இயங்குதுனு சொல்லி சொல்லி பஸ் டிக்கெட் விலையை உயர்தரா… ஆனா பஸ்ல ஒரு வசதியும் இல்லை.பஸ்ல போறவா உசுருக்கும் கூட உத்தரவாதம் இல்லை.
அஷ்வின் மழைக்காலத்துல ரோட்டுல நடந்து போனா கூட நனைய மாட்டார்கள்.ஆனா சென்னை டவுன் பஸ்ல போனா தொப்பமா நனைந்து விடுவாங்க…
ப்ரியா ஹா… ஹா… ஹா… சென்னை மக்களுக்கு போதிய பஸ் ஃபேசிலிட்டிஸ்சே இல்லை…
ஷாமா ஓ…அப்படியா?இதுல வைட் போர்ட்,கிரீன் போர்ட், டீலக்ஸ்னு,தினுசு தினுசா பஸ்சுக்கு பேர் வெச்சி டிக்கெட் ரேட்டை உயர்தரா. ஆனா பஸ் மட்டும் சரியில்லை…
அஷ்வின் ஒரு வண்டிக்கு இவ்வளவு மெயின்டனன்ஸ் செலவு பண்ணதா கணக்கு காட்டுறாங்க. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம.பாமா பஸ்சுல ஆட்டோமெட்டிக் டோர் ஓபன்,க்ளோஸ்,இருக்கு. பல பஸ்ல இது சில சமயம் ஒர்க் ஆகாது ஒரு கதவு திறந்து இருக்கும்,ஒரு கதவு மூடி இருக்கும்…
ஷாமா சரியா…போச்சுபோ… அந்தக் கதவுல ஜனங்க மாட்டிக்காம இருந்தா சரி…

N3

Leave A Reply

Your email address will not be published.