பூவாளுர் கூலை ஆற்றில் தொடர் துர்நாற்றம் நடிவடிக்கை எடுக்குமா சுகாதார துறை

0
Business trichy

லால்குடி அடுத்த பூவாளுர் கூலை ஆற்றில் தொடர் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளுர் பேரூராட்சி உட்பட்ட திருச்சி சிதம்பரம் சாலையில் கூலை ஆறு உள்ளது. ஆற்றில் இருபுறமும் கோழி கழிவுகளை கொட்டுவதால் தொடர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியில் செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கோழி கழிவுகளை உண்பதற்காக நாய்கள் சாலையில் அலைகின்றன.

web designer

இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவன குறைவால் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகின்றது.
இதற்கு, பூவாளுர் லால்குடி பேரூராட்சியின் மெத்தன கோளாறால் விபத்து ஏற்படுகிறது என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கூலை ஆற்று கரையில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் சிலர் கழிவுகளை கொட்ட பேரூராட்சியின் ஒத்துழைப்போடு தான் கழிவுகளை அங்கு கொட்டுவதாக கூறுகின்றனர்.

அனுமதி தந்தவர்களுக்கோ, இல்லை கழிவுகளை கொட்டுபவர்களுக்கோ விபத்து ஏற்படுவது இல்லை. ஆனால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தான் நாய்களால் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.
மேலும், கோழி கழிவுகளால் வீசும் துர்நாற்றத்தினால் ஏற்படும் நோய்களை தடுக்கவும் கூலை ஆற்று கரையில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிகை எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறையிடம் அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.