சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்வு சேவை மையம் திறப்பு

0

தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கை 2019க்கான இணையவழி கலந்தாய்வு சேவை மையம், அரசினர் பொறியியல் கல்லூரி ஶ்ரீரங்கம், சேதுராப்பட்டியில் நிறுவப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மே 2ஆம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம்.
இதற்காக மாணவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பள்ளி தகவல்கள், பெற்றோர் விபரங்கள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தும் விபரம் போன்றவற்றுடன் கலந்தாய்வு சேவை மையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இணையவழி மூலமாக தங்கள் வீட்டிலிருந்தும் பதிவு செய்து கொள்ளலாம். பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பக் கட்டணமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250ம் இதர வகுப்பினர் ரூ.500ம் கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.100 (ஒவ்வொரு பிரிவுக்கும்) கூடுதலாக செலுத்த வேண்டும்.

‌சந்தா 1
சந்தா 2

வங்கி கேட்பு வரைவோலை (நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் மட்டும்) மூலம் பதிவு செய்ய கண்டிப்பாக சேவை மையம் வர வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி இல்லாத மாணவர்களுக்கு இவ்வுதவி மையத்தில் புதிய மின்னஞ்சல் முகவரி உருவாக்கித் தரப்படும்.

2வது கட்டமாக அடுத்த மாதம் ஜுன் 6ஆம் தேதி ஜுன் 11 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனைத்து மாணவர்களும் தவறாது தங்களது அசல் சான்றிதழ்களுடன் அரசினர் பொறியியல் கல்லூரி ஶ்ரீரங்கம், சேதுராப்பட்டி சேவை மையத்திற்குக வர வேண்டும். அதற்குரிய நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்கள் தங்களது பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.
3வது கட்டமாக ஜுலை 3ஆம் தேதி முதல் ஜுலை 28ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். இணையவழி விருப்பத்தேர்வு மற்றும் தேர்வினை உறுதி செய்தல் போன்றவற்றினை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சேவை மையத்திலோ செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய www.tneaonline.in அல்லது www.tndte.gov.in என்ற இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அரசினர் பொறியியல் கல்லூரி ஶ்ரீரங்கம், சேதுராப்பட்டியில் நிறுவப்பட்டுள்ள கலந்தாய்வு சேவை மையத்தினை அணுகலாம். மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Leave A Reply

Your email address will not be published.