குழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் !

0
1 full

குழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் !

 

தமிழகத்தில் குழந்தை திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

2 full

தோவாளை அருகே 18 வயது நிறைவடையாத கல்லூரி மாணவிக்கும், கட்டுமான தொழிலாளி சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட குழந்தை நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.  இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள், திருமணம் நடத்த முற்பட்டவர்களை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், திருமணம் நடத்த முற்பட்டவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

3 half

Leave A Reply

Your email address will not be published.