திருச்சி மருத்துவர்களின் மனிதநேயம் இரண்டு வருடத்தில் மாறுமா ? வாசகர் வாய்ஸ் !

0
1

கடந்த 2 வருடங்களுக்கு முன் எனக்கு இடது கையில் வலி ஏற்பட்டு 6 மாதகாலமாக வேறு வேறு சிகிச்சைகள் செய்து பார்த்தும் சரியாகவில்லை. இந்த நேரத்தில் வானொலியில் திருச்சி அரசு மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பிரிவு ஆரம்பிக்க உள்ளதாகவும் அதன் மூலம் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஒருவர் தனது உரையில் கூறக்கேட்டு, அங்கு சென்றேன்.

அப்போது எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. மருத்துவர் தானே வந்து எனக்கு என்ன செய்கிறது என்பதை மிகவும் கனிவுடன் விசாரித்து, நன்கு சிகிச்சை செய்தார். ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் செல்லும் போதெல்லாம் நான் கூறும் குறைகளை பொறுமையுடன் கேட்டு, உங்களுக்கு கடந்த ஆறுமாதமாக இந்த கைவலி இருந்து கொண்டு உள்ளது. அதனால் படிப்படியாக குணமாகிவிடும். கவலைப்படாதீர்கள் என்று அன்புடன் கூறுவார். நானும் 20 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக கைவலி முற்றிலும் குணமாகிவிட்டது. அதன்பின் அவர்களிடம் என் நன்றியை தெரிவித்துவிட்டு நான் மருத்துவமனைக்கு செல்வதில்லை.

2
dav

தற்போது எனக்கு மீண்டும் கால் வலி தொடர்ந்து இரு மாதங்களாக இருந்து வந்தது. சரி, வர்மா சிகிச்சை பிரிவிற்கு செல்வோம். அவர்கள் தான் நன்றாக பார்க்கிறார்களே என்று முடிவு செய்து, சென்ற வாரம் அரசு மருத்துவமனையில் உள்ள வர்மா சிகிச்சை பிரிவிற்கு சென்றேன்.

4

அப்போது எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விடுமுறை போலும். அதனால் நர்ஸ் சிகிச்சை அளித்தார். இருப்பினும் ஒரே நாளில் எனக்கு கொஞ்சம் பரவாயில்லை. சரி அடுத்தநாள் சென்றேன். அப்போது அந்த மருத்துவர் வந்திருந்தார்.

ஆனால் அவர் என் அருகில் வரவே இல்லை. நர்ஸ் மட்டுமே அதுவும் நோட்டீஸ் போர்டில் எழுதப்பட்டிருந்த செய்திகள் குறித்து (மருத்துவரும் நர்ஸ்) இருவரும் விவாதித்துக்கொண்டு நர்ஸ் எனக்கு சிகிச்சை அளித்தார். நான் எனக்கு கால் பாதங்கள் வலிக்கிறது என்றேன். அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் சொல்வதெல்லாம் கேட்க இயலாது. உயர் மருத்துவர் சீட்டில் என்ன எழுதி இருக்கிறாரோ, அதனைத்தான் நாங்கள் செய்ய முடியும் என்றார். நானும் அமைதியாகி விட்டேன்.

அடுத்தநாள் சென்றபோது மருத்துவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். நர்ஸ் சிகிச்சை செய்தார். ஆனால் எனக்கு கால் வலி குணமாகவில்லை. அந்த ஆறுதலான வார்த்தைகளைக் காணோம். சரியாகிவிடும். இந்த தைலம் தடவுங்கள் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுங்கள் என்றெல்லாம் சொல்லும் அந்த மருத்துவர் எங்கே என்று தேடினேன். காணவில்லை…

(2 வருடங்களில் எத்தனை மாற்றங்கள்… மருத்துவரிடம் உள்ள மனிதநேயமுமா மாறும். புரியவில்லை. நான் நாளை வரணுமா என்றேன். வலி இருந்தால் வா என்றார் நர்ஸ். பிறகு வந்த நாட்களில்.. நான் செல்லவில்லை. மிகவும் வருத்தத்துடன் ஒரு நோயாளியாக இதனை பதிவு செய்கிறேன்).

-மீனாட்சி, பீமநகர்

3

Leave A Reply

Your email address will not be published.