திருச்சியில் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம ஆசாமி கைது

0
Full Page

திருச்சியில் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம ஆசாமி கைது

திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(42). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6 ஆம் தேதி இவரது கடை தொலைபேசியைத் தொடர்பு கொண்டு பேசிய மர்ம ஆசாமி, திருச்சியில் 10 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

Half page

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் தெரிவித்ததின் பேரில், மர்ம ஆசாமி பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு பாலக்கரை போலீஸார் பேசியுள்ளனர். அவர்களிடமும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அவர் பேசினாராம்.
இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த ஆசாமியை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை பிடித்து, திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் முனீசுவரன்(21) என்பது தெரிய வந்தது.

சுமைத் தூக்கும் வேலை செய்து வரும் இவர், ஹரிகிருஷ்ணன் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பாலக்கரை போலீஸார் முனீசுவரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.