குப்பைகளை வீதியில் கொட்டும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்

0
Business trichy

திருச்சி மாநகராட்சியின் ஒப்பந்த வாகனங்கள் மூலம் எடுத்துவரப்படும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் காஜாப்பேட்டை 23வது வார்டில் உள்ள சாலையில் கொட்டப்படுகின்றன. பொதுவாக பொதுமக்கள் தான் இது போன்று ஒரு இடத்தில் குப்பைகளை கொட்டி வைப்பார்கள், மாநகராட்சி ஊழியர்கள் அதை எடுத்து அப்புறப்படுத்துவார்கள். ஆனால், இங்கோ மாறாக, மாநகராட்சியினரே குப்பைகளை சாலையில் கொட்டிச்செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிவருகிறது. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்குள்ளாகும் வாய்ப்புகள் ஏற்கின்றன.

web designer


இது குறித்து மாநகராட்சி ஒப்பந்த வாகன ஓட்டுனர் கூறும் போது, இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள குப்பை கிடங்கில் கொண்டு செல்வதற்கு வாகன தேய்மானம் மற்றும் அதிகப்படியாக பெட்ரோல் தேவைப்படுகின்றன. அதனால், இக்குப்பைகளை இங்கே கொட்டிச்செல்கிறோம் என்கிறார். இது போன்று மக்களின் மீது அக்கறை இல்லாத ஒப்பந்ததாரர் மீது மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது மாதிரி குப்பைகள் வேறு எங்கும் கொட்டப்படுகின்றனவா என காண்காணிக்க வேண்டும்.

-ஜெய்க்கர், கிராப்பட்டி

IAS academy

Leave A Reply

Your email address will not be published.