ரயில்வே விற்பனையாளர்கள் சந்திப்பு மகளிர் நிறுவனங்களுக்கு 3% ஒதுக்கீடு செய்ய வேண்டும்

0
Business trichy

சென்னை மற்றும் கோவையில் ரயில்வே விற்பனையாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதைத்தொடர்ந்து, மகளிர் நிறுவனங்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு செய்ய முனைப்பு காட்ட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது கொள்முதல் கொள்கை உத்தரவு – 2012 அரசு ஆணையில்கடந்த நவம்பர் 2018, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதில்அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு உற்பத்தியாளர்களின் தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆண்டு மொத்த கொள்முதலில் 20 சதவீதம் மேற்கொள்ள வேண்டும் என இருந்த சரத்தை 25 சதவீதமாக உயர்த்தியது. மேலும் அதில் 3 சதவீதம் பெண் உற்பத்தியாளர்களுக்கு ஒதுக்கீடு தந்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு உற்பத்தியாளர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சகம் சிறு குறு நிறுவனங்களிடம் அரசு மற்றும் பொதுத்துறைகள் கொள்முதல் செய்ய வேண்டிய 358 பொருட்களை பட்டியலிட்டு உள்ளது. மத்திய அரசு நிறுவனமான ரயில்வே தொடர்ந்து இந்த உத்தரவை பின்பற்றி கொள்முதல் செய்து வருகிறது. ரயில்வேயின் மின்னனு கொள்முதல் முறை திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1,07,098 சிறு குறு உற்பத்தியாளர்கள் மற்றும் 3,520 ஏலதாரர்கள் இதுவரை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Kavi furniture
MDMK

ரயில் பெட்டிகளுக்கு விளக்கு, மின்விசிறி, அலுவலகங்களுக்கு தண்ணீர் தொட்டிகள், இரும்பு அலமாரி, பீரோ, மேஜை, தொழிற்சாலைகளுக்கு ஒயர், போல்ட், நெட், 15 குதிரை திறன் வரை உள்ள மோட்டார்கள், எந்திரங்கள், மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் பலவித பொருட்கள் இந்த பட்டியலில் ரயில்வேக்கு தேவைப்படுகிறது.

ரயில்வே தேவைகளுக்கு ஏற்ப பொருட்களின் எண்ணிக்கை, தரம், அளவு, ஒப்படைக்க வேண்டிய இடம், ரயில்வே ஒப்பந்த விதிகள், பணப்பட்டுவாடா என பலவற்றை நாடு முழுவதும் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தெளிவு படுத்தவும், கொள்முதலுக்கு ஏற்ற நிறுவனங்களை தேர்வு செய்யவும், நடப்பு மாதம் மே முதல் தேதியில் துவங்கி “ரயில்வே – விற்பனையாளர்கள்” சந்திப்பை ரயில்வே வாரியம் நாடு முழுவதும் 25 இடங்களில் நடத்துகிறது. இந்த சந்திப்பு கோவை மாநகரத்தில் வரும் மே 9 ம் தேதியும், சென்னையில் வரும் மே 20 ம் தேதியும் நடக்க இருக்கிறது.

15
புதிய விதிகளின் படி மகளீர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற “ரயில்வே –விற்பனையாளர்கள்” சந்திப்பில் மகளீர்கள் நடத்தும் சிறு குறு நிறுவனங்களை பங்கேற்க வைக்க ரயில்வே முனைப்பு காட்ட வேண்டும்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.