மருத்துவ கட் ஆப் உயருகிறது! பொறியியல் கட்ஆப் குறைகிறது!

0
1

இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ சேர்க்கையில் மருத்துவ கட் ஆப் உயரவும், பொறியியல் கட்ஆப் குறையவும் வாய்ப்புள்ளது என பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி கேர் அகாடமியின் வடக்கு ஆண்டாள் தெரு மையத்தில் நடைப்பெற்றது. +2 படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், சரியான பாடத்தையும், சரியான கல்லூரிகளையும் தேர்ந்தெடுப்பது பற்றி விளக்கவும், குறிப்பாக மருத்துவ நீட் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் முறைப் பற்றி விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு கேர் அகாடமி இயக்குனர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டார்.

மேலும், இவ்விழாவில் சிறப்புவிருந்தினர் பேசுகையில், இந்த ஆண்டு +2 மதிப்பெண்களை கவனிக்கும் போது பெரும்பான்மையான மாணவர்கள் 500க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் அளவு மிகக் குறைவு.

2
4

அண்ணா பொறியியல் கல்லூரி உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் 5லிருந்து, அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை கட்ஆப்பில் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். சித்தா, யுனானி மற்றும் ஆயுர்வேதம் உட்பட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும், இதற்கு நீட் தேர்விற்கு பிறகு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓர் ஆண்டு நீட் பயிற்சி படித்து வருவதால் மருத்துவ படிப்பிற்கான நீட் கட்ஆப் மதிப்பெண்கள் உயரவும் வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மைய இயக்குனர் முத்தமிழ் செல்வன் பேசுகையில், இந்த ஆண்டு முதல் பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவ மற்றும் வேளாண் பொறியியல் கட்ஆப் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்வதில் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது. குறிப்பாக பொறியியல் கலந்தாய்விற்கு கணிதத்தில் 100 மதிப்பெண்களும், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடத்தில் தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு கட்ஆப் கணக்கிட வேண்டும். இதேப் போல கால்நடை மருத்துவத்திற்கு உயிரியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு கட்ஆப் கணக்கிடப்படும்.

வேளாண் பொறியியல் படிப்பிற்கு கணிதம், உயிரியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் என 4 பாடங்களிலும் தலா 50 மதிப்பெண்கள் என கட்ஆப் 200 ஆக கணக்கிடப்படும். இது வரை கட்ஆப் மதிப்பெண்களில் 0.25 வீதம் குறைந்தது. இனி 0.5 என்ற அளவில் கட்ஆப் குறையும். இந்த ஆண்டு முதல் 200, 199.5, 199 என 0.5 வீதம் கட்ஆப் குறையும். ஒரே கட்ஆப் மதிப்பெண்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பெறும் போது, நான்காவது பாட மதிப்பெண்ணையும் , அதுவும் ஒன்றாக இருக்கும் போது ,பிறந்த தேதி அடிப்படையிலும், கடைசியில் அதுவும் ஒன்றாக இருந்தால் ரேண்டம் எண் அடிப்படையிலும் சேர்க்கை நடத்தப்படும்.
நமது மையத்தில் +1, +2 மற்றும் 9, 10ஆம் வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகின்றது. ஓர் ஆண்டு நீட் பயிற்சி ஜுன் 2வது வாரம் முதல் தொடங்குகிறது. வெளிமாவட்ட மாணவர்களுக்கு தங்கி கல்வி பயிலும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.