பியூர் சினிமா புத்தக அங்காடியில் இயக்குனர் மகேந்திரன் படச்சுருள் வெளியீட்டு விழா

0
1

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இயக்குனர் மகேந்திரன் படச்சுருள் மற்றும் சிறப்பிதழ் வெளியீட்டு விழா, மகேந்திரன் நினைவுக் கூட்டமும் நடைபெற்றது. இதில், நடிகர் சித்ரா லக்ஷ்மணன், மகேந்திரனின் மகன் இயக்குனர் ஜான் மகேந்திரன், இயக்குனர்கள் ராசி அழகப்பன், அம்ஷன்குமார், அருண் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், இயக்குனர் ராசி அழகப்பன் கூறியதாவது, ஒன்பது படம் மட்டுமே இயக்கியுள்ளார் மகேந்திரன். ஆனால், இந்த ஒன்பது படமும் 90 ஆண்டுகள் பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. டூயட் இல்லாமல், கதைக்கு எது தேவையோ அது மட்டுமே படத்தில் இருக்கும் என்றார்.
இயக்குனர் அருண் வைத்தியநாதன் பேசும்போது,
மகேந்திரன் எழுத்தாளர்களை மதித்தார். கதைகளை தேடி, தேடி சென்று எழுத்தாளர்களை மதித்து உருவாக்கினார். அவர்களுடைய காலக்கட்டத்தில் பல இயக்குனர்கள் கதைகளை எழுத்தாளர்களிடம் வாங்கியே படங்களை உருவாக்கினார்கள். இன்றோ எந்த இயக்குனர்களும் எழுத்தாளர்களை மதிப்பதில்லை. சினிமாவில் எழுத்தாளர்களின் பகுதி மற்றும் பங்களிப்பே இல்லை. ஆகையால் நாம் மகேந்திரன் போல முதலில் எழுத்தாளர்களை மதிக்க வேண்டும் என்றார்.

இயக்குனர் ஜான் மகேந்திரன் கூறும்போது,

2

அப்பா தொடர்ந்து படம் பார்ப்பது, புத்தகங்களை படிப்பது, எழுதுவது என்று இந்த மூன்றில் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவார். அப்பா அறை முழுவதும் புத்தகங்களை நிரப்பி, இறக்கும் முன் வரை படித்துக்கொண்டே இருந்தார். அப்பா எடுத்துள்ள அனைத்து படமும் ‘எதார்த்தம்’ நிறைந்து இருக்கும். ஆனால், அப்பா ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பி பார்ப்பார் நன்றாக இருந்தால் இயக்குனரை பாராட்டுவார். யாரேனும் நல்ல கருத்துக்களையோ அல்லது செய்திகளையோ கூறினால், உடனே ஒரு டைரியை எடுத்து தேதியிட்டு அவரின் பெயரை எழுதி குறித்து வைத்துக் கொள்வார். அது போன்று இருபதுக்கும் மேற்பட்ட டைரிகள் அப்பா எழுதியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் கஷ்டத்திற்கு குடும்பம் வந்துவிட்டது. சோற்றில் வெறும் மஞ்சள்தூளை போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தோம். இரண்டாயிரம் ரூபாய் இல்லாமல் அவதிப்பட்டோம். அப்போது கூட புத்தகத்தின் மீது உள்ள காதலால் என்னிடம் ஒரு புத்தகத்தை கேட்டு அதனை வாங்கி வர சொன்னார். நானும் புத்தகத்தை எழுதியவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்பா உங்க புத்தகத்தை வாங்கி வர சொன்னார். படித்தவுடன் திருப்பி தந்துவிடுகிறேன் என்றெல்லாம் கூறி புத்தகத்தை வாங்கி கொடுப்பேன். அவர் அதனை படித்து சந்தோஷப்படுவார். அப்பாவின் படங்களை ‘ரீமேக்’ செய்ய பல முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அணுகினார்கள். குறிப்பாக ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தை அனில் கபூரும், ‘ஜானி’ படத்தை நானா படேகரும், “உதிரிப்பூக்கள்” படத்தை தெலுங்கிலும் கேட்டார்கள். ஆனால் அப்பா முடியவே முடியாது என்று ஒத்தக்காலில் நின்றார். இவருக்கு என்ன ஆச்சு கையில் காசு இல்லை கேட்டா பண்ண வேண்டியதுதானே? என்று நான் அப்பாவை திட்டுவேன். அப்பா ரீமேக் செய்யாததன் காரணத்தை இப்போது தெரிந்து கொண்டேன். ஒரு ஜானி, ஒரு முள்ளும் மலரும் மட்டுமே மலரும் மீண்டும், மீண்டும் அவை ஒரே மாதிரி மலராது என்று. அப்பா காசுக்காக தன் படைப்புகளை விற்கவே இல்லை.

அப்பாவின் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் வயதான தம்பதிகள் ஆறுமாதம் மகன் வீட்டிலும், மீதமுள்ள ஆறுமாதம் வெளிநாட்டில் உள்ள மகள் வீட்டிலும் வசிப்பார்கள். இதனைக் கொண்டு அப்பா திரைக்கதை அமைத்தார். அதன் முழுகதையையும் என்னிடம் இரண்டு மணி நேரம் விவரித்தார். நான் அழுதுவிட்டேன். எப்படிடா இருக்கு? என்று என்னிடம் கேட்டார். படம் அருமை என்றேன். ஆனால் படம் எடுப்பதற்குள் இறந்துவிட்டார். இயக்குனர் மகேந்திரனின் ரசிகர்களில் ஒருவனான நான் மட்டுமே அவர் படம் எடுக்காத கதையை கேட்டதில் மிகவும் மகிழ்சியடைந்தேன். மகேந்திரனின் மகன் என்கின்ற ஒரு பெருமை எனக்கு போதும் என்று கண்கலங்கியபடி பேசி முடித்தார்.
அதன்பிறகு, நடிகர் சித்ரா லஷ்மணன் மகேந்திரன் பேசினார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.