நயன்தாரா கடமை முடிந்தது!

கடைசி நேரம் வரை வருவரா? வரமாட்டாரா? என்று தெரியாமல் இருந்த கால்ஷீட்டை சண்டே மார்னிங் தான் ஓகே செய்துகொடுத்தார் நயன்தாரா. காரணம், மிஸ்டர் லோக்கல் பட டிரெய்லர் நல்லா வந்திருந்தது தானாம். சண்டே ஒருநாள் ஷூட்டிங் மட்டும் நடந்துட்டா போதும்னு தான் ஷூட்டிங்குக்கான எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருந்துட்டு காத்திருந்தது லோக்கல் டீம். ஆனால், மார்னிங் வரைக்கும் தர்பார் பட ஷூட்டிங்குக்காக மும்பையில் இருந்த நயன்தாரா ஆன்லைன் வரவே இல்லை. மிஸ்டர் லோக்கல் டிரெய்லரை அப்லோட் பண்ணிட்டு எல்லாருக்கும் அனுப்பி வெச்சிருக்காங்க படக்குழு. அதைப் பார்த்ததுக்கு அப்பறம் டீம்ல இருந்த பலரும் நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு தான் அவருக்கு நியாபகம் வந்து ஃபோன் போட்டு ஓகே சொல்லி ஷூட்டிங் கிளம்பி வந்தார்” “நயன்தாரா மிஸ்டர் லோக்கல் படத்துல நடிச்சதே 20 நாளிலிருந்து 25 நாளுக்குள்ள தான் இருக்கும்.

ஆனால், அந்த கால்ஷீட்டை முடிக்கிறதுக்குள்ளவே கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓடிப்போச்சு. நயன்தாரா கால்ஷீட்டை இன்னொரு தரம் வீணாக்கிட்டு, திரும்பவும் அவங்ககிட்ட தலையை சொறிஞ்சிக்கிட்டு நிக்கக்கூடாதுன்னு சிவகார்த்திகேயனின் பல புராஜெக்ட்களை நிறுத்தி வெச்சு ஒரு வழியா ஷூட்டிங்கை முடிச்சிட்டாங்க. கடைசி நாள் ஷூட்டிங்லயும் மேடம் சந்தோஷமாவே கலந்துக்கிட்டது பலருக்கும் ரொம்ப மகிழ்ச்சி”
நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி தான் தற்போது பெரிய ஹாட் டாப்பிக் வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டுயிருக்கும் போதே நிச்சயதார்த்தம், திருமணம் என அடுத்த அடுத்த நிகழ்வுக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு இருக்கும் நயன்தாரா சினிமாவில் தன்னுடைய கடைமையை மிகவும் திருப்திகரமாக முடித்தாகவே நினைக்கிறார். நிச்சயத்துக்கு தேதி கேட்டு ஆஸ்தான ஜோதிடரின் பதிலுக்காக காத்திருக்கிறார்.
