இரணகளத்திற்கு சொந்தமான எண்

0

9, 18, 27ம் தேதி பிறந்தவர்கள் அல்லது தேதி+மாதம்+வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் 9 ஆக இருந்தாலோ அல்லது பெயரின் கூட்டு எண் 9 ஆக இருந்தால் அவர்கள் 9 எண்காரர்கள் ஆவார்கள். இவ்வெண் செவ்வாயை குறிக்கும்.

வசிஷ்ட பிரம்ம ரிஷியின் வம்சத்தில் பரத்வாஜ் மகரிஷிக்கு பிறந்தவன் செவ்வாய் அங்காரகன். பரத்வாஜ் மகரிஷியின் மனைவி குழந்தையை நதிக்கரையில் விட்டுச் சென்றார். அக்குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்தார். அதனால் செவ்வாய் பூமிக்காரகனானான்.

செவ்வாய் ஒரு யுத்த கிரகம் முதல் வரிசையில் இருக்கும் அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரி, நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள், வீரம் படைத்த புரட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு எண் 9 அதிகம் காணப்படும். எண் 9 பூமிக்காரர்கள் என்பதால் சொந்த வீடு இல்லாமல் இருக்காது. இவ்வெண்காரர்கள் அதிகம் கோபம் வரக்கூடியவர்களாக இருப்பார்கள். செவ்வாய் இரத்த சகதியில் நிற்கும் அழகான தேவதை. அடிக்கவும் செய்வார்கள், அரவணைக்கவும் செய்வார்கள்.

இவர்கள் புகழ்ச்சிக்கு அடிமையாவார்கள், யாராவது புகழ்ந்தால் வள்ளல் போல் அள்ளிக் கொடுப்பார். 9ம் எண்ணிற்கு 2,4,7 எதிரான எண் ஆகும்.
இரணகளத்திற்கு சொந்தக்காரர்களான இவர்கள், தண்டிக்க வேண்டும் அல்லது கண்டிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். உழைத்து உதவ வேண்டும் என்ற குணம் கொண்ட இவர்கள், ஒளிவு மறைவோடு நடப்பதும் பிறர் எப்படிப்பட்டவர் என கண்டறிவதிலும் ஆவலுடன் இருப்பர். தந்திரம் செய்து காரியம் சாதித்துக் கொள்ளும் இவர்கள், பயம் அறியாதவர்கள். உடன் இருந்தால் வாழவைப்பர், பகைத்தால் அழிக்கும் குணம் கொண்டவர்கள்.

எண் 9 தொழிற்கூடத்தையும் குறிக்கும். ஊரின் பெயர் 9ல் இருந்தால் அந்த ஊர் தொழில் வளத்தில் சிறக்கும். அதில் எண் 18. (1+8=9) வந்தால் பற்றி எரியும் தொழில் இருக்கும் அல்லது ஊர் பற்றி எரியும். உதாரணம்
சிவகாசி (SIVAKASI = 3+1+6+1+2+1+3.+1=18 (1+8=9))
வெடிக்கும் பட்டாசு தொழிலில் உலகளவில் சிறந்து விளங்கும் நகரம்.
மும்பை (MUMBAI = 4+6+4+2+1+1 = 18 (1+8=9))
இந்தியாவின் முதன்மையான தொழில் நகரமாகும்.

லங்கா (SRI LANKA = 3+2+1+3+1+5+2+1 = 18 = 9)
பெயர் மாற்றியதிலிருந்து இன்று வரை நாடே துப்பாக்கியாலும், குண்டு வெடிப்பாலும் பற்றி எரிகிறது. பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே இந்நாட்டில் அமைதி நிலவும்.
கோயம்புத்தூர் (COIMBATORE 3+7+1+4+2+1+4+7+2+5 =36=3+6=9)
தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாகும்.
ராணுவம், நெருப்பு சார்ந்த தொழில்கள், உணவு விடுதிகள், பட்டாசு தொழில், ரியல் எஸ்டேட், கட்டிடத் தொழில் உள்ளிட்ட வேலைகளை இவர்கள் அதிகம் ஈடுபடுவர்.

food

9ம் எண்ணிற்கான உதாரணங்களை
அடுத்த வாரம் பார்ப்போம்…

-சுரேஷ் ஆழ்வார்

gif 4

Leave A Reply

Your email address will not be published.