இன்று உலக குடும்ப தினம்

0
Full Page

கடவுள் உலகத்தை படைக்கும்போதே தன்னைப்போல தன் உயிரை காக்க ஒரு ஜீவன் இந்த உலகில் வேண்டுமென தாயைப் படைத்தான். பிறகு அவளைக் கவனித்துக்கொள்ள ஒரு தந்தையை படைத்தான். அவர்களுக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தரவல்ல குழந்தைகளைப்படைத்தானாம்.

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம்.

இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது.

Half page

குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளையும் கடவுள் நமக்கு தந்த வரமாக நினைத்து சுற்றத்தாருடன் முயன்ற அளவு சண்டையிடாமலாவது வாழ கற்றுக்கொள்வோம்.

பகிர்ந்த துன்பம் பாதியாகிறது. பகிர்ந்த இன்பம் பல மடங்காகிறது என்று ஒரு பொன்மொழி உண்டு. அதனை கருத்தில் கொண்டு குடும்பத்துடன் கூடி வாழ்வோம். கோடி நன்மைகளை பெறுவோம்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.