அறிவோம் தொல்லியல்-15 பயணங்கள் முடிவதில்லை…

0
1

ஓவியங்களே எழுத்துக்களின் முதல் நிலை

எழுத்துக்களின் தோற்றம்:

ஆரம்பத்தில் மனித இனம், எழுத, படிக்க, பேச அறிந்திருக்கவில்லை. சைகையிலே பேசிவந்தனர். ஆதியில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த காலத்தினால் நிலையாய் தங்கி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

4

பிறருக்கு தன் கூற விளைந்ததை சைகையிலோ, அருகேயுள்ள பொருட்கள் (மண், மலை) போன்றவற்றில் வரைந்து தெரியப்படுத்தினர். நாட்கள் செல்ல, செல்ல அதில் ஒரு செறிவு பிறந்தது. மேம்போக்காய் வரைந்த ஓவியத்திலிருந்து, மெல்ல, மெல்ல தெளிவாக வரைய ஆரம்பித்தனர்.

நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததால் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ பழகாததால், இயற்கையான குகைகள் போன்றவற்றை தங்கள் வாழ்விடமாய் தேர்ந்தெடுத்தனர். வெயில்காலத்தில் வேட்டையாடி உண்டனர். மழைகாலத்தில் அதுவும் பெருமழைகாலங்களில் வெளியேற வாய்ப்பில்லாததால், நீண்ட ஓய்வு இயற்கையாகவே கிடைத்தது. மனித மனம் அப்போது, தான் கண்டு, பார்த்தவற்றை வரைய ஆரம்பித்திருக்கும், இயற்கையாகவே பாறைகளில் வடியும் வண்ணங்களை சேகரித்து, நேரம் அதிகம் கிடைக்க  சூரியன், தான் கண்ட மலைமுகடு, விலங்குகள், வேட்டையாடியது போன்றவற்றை வரைய பழகிக்கொண்டனர்.

இத்தகைய ஓவியங்கள் உலகமெங்கிலும் உள்ளது. தமிழகத்தில் நிறைய இடங்களில் இத்தகைய ஓவியங்கள் காணப்படுகிறது! இவையே எழுத்துகள் தோன்றுவதன் முதல்நிலை.

இன்றைய தமிழ்வரி வடிவம் எவ்வாறு தோன்றியிருக்கும்?

அதன் நிலையை 1.பாறைஓவியங்கள், 2.குறியீடுகள், 3.தமிழி என பிரிக்கலாம்.

 

 

 

பாறைஓவியங்கள்

2

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர் முதலிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்வாளையில் நிறைய குறியீடுகள் கிடைத்துள்ளது. இக்குறியீடுகள் சிந்துசமவெளி குறியீடுகளுடன் ஒத்து போகிறது. இந்த ஓவியங்களின் வயதை கி.மு 1000 -500 என கணித்துள்ளனர். இங்குள்ள ஓவியங்கள் 1984ல் கண்டறியப்பட்டது. இக்குறியீடுகளே பிராமி(அ) தமிழி எழுத்துக்களின் முன்னோடி.

விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியில் ஒரு சிறப்பான ஓவியம் காணப்படுகிறது! இதை உடுகதிர் ஓவியங்கள் என அழைப்பர். அதாவது விலங்குகளின் உட்புற உறுப்புகளின் அமைப்பை வரைதல். கிருஷ்ணகிரி தாலுக்கா மல்லபாடியில் உள்ள ஓவியங்கள் சண்டையிடும் போர்க்காட்சிகளை அழகாய் வடித்துள்ளனர். மேலும், சில ஓவியங்களில் அப்பகுதி  மக்களின் அன்றைய வாழ்வியல்கள் இன்றும் பிரதிபலிப்பதாய் உள்ளது. கிருஷ்ணகிரி வட்டத்தில் கிடைத்த சில ஓவியங்களில், வட மாவட்ட மக்கள் வீடுகளில் வைத்து வணங்கும் வளமைச்சின்னங்கள் போன்று தோற்றமளிக்கிறது.

மதுரை மாவட்டம் அழகர்மலையில் கிடைத்த ஓர் ஓவியத்தில், தென்னகபகுதி மக்கள் இன்றளவும் வணங்கும் சுடலைமாட சுவாமியின் தோற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மதகடிப்புதூரில் கிடைத்த ஓவியங்கள் அப்பகுதியின் பூர்வீக குடியினரான பளியர்களின் வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்கிறது.

சற்று விரிவாக இவ்வோவியத்தை காண்போம்.

மதகடிப்புதூர் பாறை ஓவியம்:

இங்கு அமைந்த பாறை ஓவியத்தில் யானை குறித்த ஓவியம் முக்கியமானது. இவ்வோவியத்தை யானையை பிடித்து, பழக்க முயன்று, பின் அதனை பழக்கப்பட்ட யானையாக மாற்றுவது வரை ஓவியத்தில் காட்டப்பட்டதாக கருதப்படுகிறது! இப்பகுதியின் பூர்வீக குடியினரான பளியர்கள் இதில் வல்லவர்கள்.

யானைகளை குழிவெட்டி பிடிக்கும் முறை

அடர்ந்த வனங்களில்  சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் யானைகளை பிடித்துக்கொண்டு வந்து   போர் பயிற்சி அளித்து யானைப் படைகள் உருவாக்குகிறார்கள். பண்டைய காலங்களில்  யானை மீதிருந்து பறை அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். அரசன்  போருக்குச் செல்லும் போதும், அதன்பின் வெற்றி வாகை சூடி வரும்போதும் பட்டத்து யானை மீது அமர்ந்து நகர் வலம்   வருவார். போர் இல்லாத காலங்களில் மற்ற வேலைகளுக்கு யானைகளை பயன்படுத்துவார்கள், கட்டடக்கலை  வேலைக்கும் பிரதானமாய் யானைகளை பயன்படுத்துவார்கள்.

யானைகள் காட்டில் ஒரு நாளைக்கு 200 கிலோ இலை தழைகளையும் 150 லிட்டர் தண்ணீரையும் தொடர்ந்து 15 கிலோமீட்டர் வரை நடக்கும்   அடர்ந்து பரந்துவிரிந்த காடுகளில் வாழ்ந்த யானைகளை பிடித்து வந்து 14 x 14  என்ற அளவில் உள்ள மர கூண்டில் அடைத்து  வைத்து  பழக்குவது என்பது  வேரோடு ஒரு   மரத்தைப் பிடுங்கி வந்து இன்னொரு இடத்தில் வளர்ப்பது போலவே ஆகும்  யானைகளும் மனிதர்களைப்  போலவே   சூழ்நிலைக்கு தகுந்தவாறு   வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மனிதர்களோடு சேர்ந்து வாழ பழகிக் கொள்கிறது   யானைகளைப் பிடித்து   பழக்கும் தொழில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசித்த  பழங்குடி மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது . யானைப்படை பிரிவிற்கு   அத்தி கோஷம் எனப் பெயரிட்டார்கள்  கல்வெட்டுக்களில் இவர்களை  அத்தி கோஷத்தார்    என அழைக்கப்படுகிறது.

யானைகளை  பிடிப்பதற்கு ஓவியங்கள் வாயிலாக அறியப்படும் முறைகள் குறித்து அடுத்த வாரம் காண்போம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்